பெட்ரோல் விலைக்கு எதிராக பா.ஜ.க. போராட்டம் நடத்துமா? - அமைச்சர் செந்தில்பாலாஜி கேள்வி

Senthilpalaji 2021 03 22

Source: provided

சேலம் : சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், செய்தியாளர்களை சந்தித்த மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தும் பா.ஜ.க.வினர், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்வார்களா எனக் கேள்வி எழுப்பினார்.

அண்டை மாநிலமான கர்நாடகாவில், கொரோனா உச்சத்தில் இருந்தபோதும், டாஸ்மாக் மதுபானக் கடைகள் அடைக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார். 

2008-ம் ஆண்டு ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 145 டாலராக இருந்தது. அன்றைக்கு இருந்த பெட்ரோல் விலை 47.50 பைசாவாக இருந்தது. டீசல் விலை ரூ.30.50 பைசாவாக இருந்தது. 

2021-ல் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 46 டாலராக இருக்கிறது. தற்போது பெட்ரோல் விலை ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.98 ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92 விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வை கண்டித்து பா.ஜ.க போராட்டம் நடத்துமா? என கேள்வி எழுப்பி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து