Idhayam Matrimony

மேகதாது அணை விவகாரம்: 4 மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்த மத்திய அரசு திட்டம்

புதன்கிழமை, 14 ஜூலை 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புது டெல்லி: மேகதாது அணை விவகாரம் தொடர்பாக 4 மாநில முதல்வர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

காவிரியின் குறுக்கே அணை கட்டுவது சுமூகமாக பேசி முடிவு காணும் வகையில் தொடர்பாக 4 மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தப்படுகிறது. தமிழக எல்லையிலிருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் மேகதாது பகுதியில் கர்நாடக அரசு அணை கட்டும் பணிகளைத் தொடங்கியுள்ளது.  காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதால் தென்பகுதிகளிலுள்ள மற்ற மாநிலங்களில் தண்ணீருக்கு பற்றாக்குறை ஏற்படும் அபாயம் நிலவுகிறது.

இதனால் காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மற்ற மாநிலங்களும் மாற்று கருத்துக்களை முவைத்து வருகின்றன.  இந்நிலையில் இந்த விவகாரத்தில் சுமூக முடிவு காணும் வகையில் கர்நாடகம், கேரளம், ஆந்திரம், தமிழகம் ஆகிய நான்கு மாநில முதல்வர்களுடன்  பேச்சுவார்த்தை நடத்த மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் திட்டமிட்டுள்ளார்.

4 மாநிலங்களின் கருத்துகளை கேட்டு அதன் அடிப்படையில் மேகதாது விவகாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேகதாது அணை விவகாரம் தொடர்பாக 4 மாநில முதல்வர்களுடன் மத்திய அரசு விரைவில் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து