முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அயோத்தி ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் உ.பி. முதல்வர் யோகி ஆய்வு

வியாழக்கிழமை, 5 ஆகஸ்ட் 2021      ஆன்மிகம்
Image Unavailable

அயோத்தியில் ராமர் கோவிலில் நடைபெறும் கட்டுமானப் பணிகள் குறித்து உ..பி முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.

அயோத்தியில் சுமார் ரூ.1,100 கோடி மதிப்பீட்டில் பிரமாண்டமான ராமர் கோவில் கட்டப்படுகிறது. இது உலகமெங்கும் உள்ள இந்துக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.  இந்தக் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 5-ம்  தேதி நடந்தது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, வெள்ளி செங்கல்லை எடுத்துக் கொடுத்து கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்தார்.

கோவில் வளாகத்தின் கட்டுமானப்பணிகள் முழுமையாக 2025 இறுதியில்தான் முடியும் எனவும் தகவல்கள் கூறுகின்றன. இந்தக் கோவிலுக்கான அஸ்திவாரப்பணிகள் செப்டம்பர் 15-ம் தேதிக்குள் முடிவடையும் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. இந்தக் கோவில் 3 தளங்கள், 5 குவி மாடங்கள், கோபுரங்கள், 360 தூண்கள் என மிக பிரமாண்டமாக உருவாகப்போகிறது.

இந்நிலையில், அயோத்தி சென்ற உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ராமர் கோவிலின் மாதிரியை பார்வையிட்டு தரிசனம் செய்தார். அதன் பின்னர் ராமர் கோவிலில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளின் முன்னேற்றத்தையும் குறித்து ஆய்வு செய்தார். அதன் பின்னர் அயோத்தியில் உள்ள ராம ஜன்மபூமி தளத்தில் ராம் லல்லாவிற்கு சென்று பிரார்த்தனை செய்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து