முக்கிய செய்திகள்

நட்டியுடன் இணைந்த ஷில்பா

வெள்ளிக்கிழமை, 13 ஆகஸ்ட் 2021      சினிமா
Shilpa 2021 08 13

Source: provided

நட்டி நடிக்கும் சைக்கோ திரில்லர் படத்தை புதுமுக இயக்குனர் ஹாரூன் இயக்குகிறார். 'வேலன் புரொடக்ஷன்ஸ்' சார்பில் வி.எம். முனிவேலன் தயாரிக்கும் 'ப்ரொடக்ஷன் நம்பர் .1' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் 'காளி'யுடன் ஷில்பா மஞ்சுநாத் முதன்மை நாயகியாக நடிக்கிறார். முக்கிய வேடங்களில் 'பிளாக் ஷீப்' நந்தினி, பாரதா நாயுடு மற்றும் ப்ரீத்தி ஆகியோர் நடிக்கிறார்கள். இந்தப் படத்திற்கு கார்த்திக் ராஜா இசை அமைக்கிறார். கிறிஸ்டோபர் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு படத்தொகுப்பை சுதர்சன் மேற்கொள்கிறார். கலை இயக்குனர் பொறுப்பை அருண் ஏற்க, இந்த படத்தின் நடன இயக்குனராக சாண்டி மாஸ்டர் பணியாற்றுகிறார்.

ஆடை வடிவமைப்பு : டோரத்தி ஜெய் , நிர்வாக தயாரிப்பு: நசீர் & கே.எஸ்.கே செல்வா

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து