முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மே.தீவுகள் - பாக். 2-வது டெஸ்ட்: 2-வது நாள் ஆட்டம் மழையால் ரத்து

ஞாயிற்றுக்கிழமை, 22 ஆகஸ்ட் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

ஜமைக்கா: மழைக்காரணமாக 2-வது டெஸ்டின் இரண்டாவது நாள் ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது.

212 ரன்கள்...

வெஸ்ட் இண்டீஸ்- பாகிஸ்தான் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கிங்ஸ்டனில் கடந்த 3 நாட்களுக்கு முன் தொடங்கியது. முதலில் விளையாடிய பாகிஸ்தான் முதல்நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 212 ரன் எடுத்து இருந்தது.

பாபர் - ஆலம்...

கேப்டன் பாபர் ஆசம் 75 ரன் எடுத்தார். பவாத் ஆலம் 76 ரன் எடுத்திருந்தபோது காயத்தால் வெளியேறினார். பஹீம் அஸ்ரப் 23 ரன்னும் , முகமது ரிஸ்வான் 22 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். கேமர் ரோச் 3 விக்கெட்டும், ஜெய்டன் சீல்ஸ் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

2-வது நாள் ஆட்டம்...

2-வது நாள் ஆட்டம் நடைபெற இருந்தது. மழை மற்றும் ஆடுகள ஈரப்பதம் காரணமாக ஆட்டம் முற்றிலும் கைவிடப்பட்டது. மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!