Idhayam Matrimony

மே.வங்க பவானிபூர் தொகுதியில் வரும் 30-ம் தேதி இடைத்தேர்தல் மம்தா போட்டியிடக் கூடும் என தகவல்

சனிக்கிழமை, 4 செப்டம்பர் 2021      அரசியல்
Image Unavailable

மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள பவானிபூர் தொகுதியில் வரும் 30-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் மம்தா பானர்ஜி போட்டியிடக்கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடவுள்ள பவானிபூர் சட்டப்பேரவை தொகுதிக்கு வரும் 30-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இங்கு வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் மம்தா பானர்ஜி உள்ள நிலையில் பா.ஜ.க. கடும் போட்டியை கொடுக்கும் எனத் தெரிகிறது.

மேற்குவங்க சட்டப் பேரவைத் தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் மகத்தான வெற்றியைப் பதிவு செய்தது. மொத்தமுள்ள 294 இடங்களில் 213 தொகுதிகளை அக்கட்சி கைபற்றியது. பா.ஜ.க. 77 இடங்களுடன் இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது.

மேற்கு வங்காள  சட்டசபை தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட முதல்வர்  மம்தா பானர்ஜி,  சுவேந்து அதிகாரியிடம் தோல்வி அடைந்தார்.  எனினும் மேற்கு வங்காள முதல்வராக  மம்தா பானர்ஜி பதவியேற்றார். அவர்  6 மாதங்களுக்குள் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட வேண்டும்.

மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள பவானிபூர் தொகுதியில்  மம்தா பானர்ஜி போட்டியிடக்கூடும் என தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த நிலையில்  மேற்கு வங்காளத்தின் பவானிப்பூர் , சம்சர்கஞ்ச், ஜங்கிபூர் மற்றும் ஒடிசாவின் பிப்லி ஆகிய நான்கு தொகுதிகளுக்கு செப்டம்பர் 30-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி வரும் 13-ம் தேதியாகும். வேட்பாளர்கள் 16-ம் தேதி வரை தங்கள் மனுக்களை வாபஸ் பெற முடியும். வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 3-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து