Idhayam Matrimony

காற்றை சுத்திகரிக்கும் நாட்டின் முதல் பனிப்புகை கோபுரம் டெல்லியில் திறக்கப்பட்டது

புதன்கிழமை, 8 செப்டம்பர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புது டெல்லி  : காற்றை சுத்திகரிக்கும் நாட்டின் முதல் பனிப்புகை கோபுரம் டெல்லியில் திறக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் நடைபெற்ற நீல வானத்திற்கான தூய்மையான காற்றின் சர்வதேச தினத்தின் இரண்டாம் ஆண்டைக் குறிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  இதனையொட்டி டெல்லியின் ஆனந்த் விஹாரில் அமைக்கப்பட்டுள்ள நாட்டின் முதல் பனிப்புகை கோபுரத்தை காணொலி வாயிலாக மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சர் புபேந்தர் யாதவ் தொடங்கி வைத்தார். தூய காற்றுக்கான தேசிய திட்டத்தின் கீழ் பிராணா என்ற காற்று மாசைக் கட்டுப்படுத்துவதற்கான தளமும் (https://prana.cpcb.gov.in/#B0001) நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. 

நிகழ்ச்சியில் பேசிய புபேந்தர் யாதவ், காற்று மாசை குறைப்பதற்காக காற்றை சுத்திகரிக்கும் கட்டமைப்பான பனிப்புகை கோபுரத்தின் இந்த சோதனை முயற்சி சிறந்த பலனை அளிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.  தூய்மையான காற்று மற்றும் அனைவருக்கும் ஆரோக்கியமான வாழ்வை ஏற்படுத்துவதற்காக நாட்டு மக்கள் உள்ளிட்ட அனைவரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் பங்களிக்குமாறு மத்திய அமைச்சர் புபேந்தர் யாதவ் கேட்டுக்கொண்டார். 

நூற்றுக்கும் மேற்பட்ட நகரங்களில் காற்றின் தரத்தை முழுவதும் மேம்படுத்த பிரதமர் இலக்கு நிர்ணயித்துள்ளதை சுட்டிக்காட்டி, நாடு முழுவதும் காற்றின் தரத்தை மேம்படுத்த ஏராளமான முன்முயற்சிகளை மத்திய அரசு அறிமுகப்படுத்தியிருப்பதாகவும், 2018-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2019-ம் ஆண்டு 86 நகரங்களில் காற்றின் தரம் மேம்பட்டுள்ளது. 2020-ம் ஆண்டு இந்த எண்ணிக்கை 104 நகரங்களாக அதிகரித்தது என்றும் அமைச்சர் தெரிவித்தார். மேலும் அனைத்து கொள்கை அணுகுமுறைகளிலும் நீர், காற்று மற்றும் பூமி போன்ற பொது சொத்துக்களுக்கு பிரதமர் தலைமையிலான அரசு அதிக முக்கியத்துவம் வழங்கி வருவதாகவும் மத்திய அமைச்சர் புபேந்தர் யாதவ் குறிப்பிட்டார்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து