முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எதிரிகளின் அணுஆயுத ஏவுகணைகளை கண்டறியும் திறனுள்ள ஐ.என்.எஸ். துருவ் கப்பல் கடற்படையில் இணைந்தது

வெள்ளிக்கிழமை, 10 செப்டம்பர் 2021      இந்தியா
Image Unavailable

இந்தியாவின் முதலாவது சேட்டிலைட் மற்றும் பாலிஸ்டிக் மிசைல் ஏவுகணை கண்காணிப்பு கப்பலான ஐ.என்.எஸ். துருவ் கப்பல் நேற்று கடற்படையில் இணைந்தது. 

ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ), தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் (என்.டி.ஆர்.ஓ) ஆகியவற்றின் ஒத்துழைப்புடன், இந்துஸ்தான் கப்பல் கட்டும் மையம் சார்பில் சுமார் 10 ஆயிரம் டன் எடை கொண்ட இந்த ஐ.என்.எஸ். துருவ் கப்பல் உருவாக்கப்பட்டுள்ளது. 

ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்,  கடற்படை தளபதி கரம்பீர்சிங், என்.டி.ஆர்.ஓ. தலைவர் அனில்தஸ்மானா மற்றும் டி.ஆர்.டி.ஓ. அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

பத்தாயிரம் டன் எடையுள்ள ஐ.என்.எஸ். துருவ் கப்பல் விசாகப்பட்டினத்தில் கடற்படை, DRDO,NTRO மூத்த அதிகாரிகளின் முன்னிலையில் நாட்டின் சேவையில் நேற்று அர்ப்பணிக்கப்பட்டது.  இந்திய நகரங்கள் மற்றும் ராணுவ நிலைகளை நோக்கி வரும் எதிரிகளின் ஏவுகணைகளை முன்னதாகவே கண்காணித்து எச்சரிக்கும் திறனுள்ள இந்த கப்பலில் DRDO உருவாக்கிய நவீன active scanned array radar பொருத்தப்பட்டுள்ளது.  அதன் மூலம் இந்தியாவை உளவு பார்க்கும் சேட்டிலைட்டுகளையும், இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் நடக்கும் அனைத்து ஏவுகணை பரிசோதனைகளையும் கண்காணிக்க முடியும். 

இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் அணு ஆயுத பாலிஸ்டிக் மிசைல் ஆபத்து அதிகரித்து வரும் நிலையில், எதிரிகளின் நீண்ட தூர அணுஆயுத ஏவுகணைகளை கண்டுபிடிக்கும் திறன்  இந்த கப்பலுக்கு உண்டு.  எதிரிகளின் நீர்மூழ்கிகளை கண்டுடிப்பதற்கான கருவிகளும் இதில் பொருத்தப்பட்டுள்ளன. நவீன நீர்மூழ்கிகள் வாயிலாக கடலடி போர் ஆயுதங்களும், கண்காணிப்பு டிரோன்களும் அதிகமாக பயன்படுத்தப்படும்  இந்த காலகட்டத்தில், ஐ.என்.எஸ். துருவ் கடற்படையில் இணைவது,  இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் இந்தியா கடற்வழி பாதுகாப்பில் விழிப்புடன் இருக்க உதவும் .

சீனாவும், பாகிஸ்தானும் அணுஆயுத பாலிஸ்டிக் ஏவுகணைகளை வைத்துள்ளன. எனவே ஐ.என்.எஸ். துருவ் கப்பல்  இந்தியாவின் கடற்வழி  பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்தும். பிரான்ஸ், அமெரிக்கா, பிரிட்டன், சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளிடம் மட்டுமே இது போன்ற கப்பல் உள்ள நிலையில் இந்தியாவும் இப்போது அந்த பட்டியலில் இணைந்துள்ளது.

 

சீனாவும், பாகிஸ்தானும் இந்தியாவுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வரும் சூழலில், அந்நாடுகளின் மூலம் வான் அல்லது கடல் வழியாக வரும் அச்சுறுத்தல்களை முறியடிக்க துருவ் கப்பல் பெரிதும் உதவும் என்று கடற்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து