Idhayam Matrimony

மீண்டும் இணையும் மெகா கூட்டணி

வெள்ளிக்கிழமை, 10 செப்டம்பர் 2021      சினிமா
Image Unavailable

கோலிவுட்டில் மிகவும் பிரபலமான இரண்டு மெகா தயாரிப்பு நிறுவனங்களான கே ஈ ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் மற்றும் சி வி குமாரின் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் ஒரு பெரிய பட்ஜெட் பொழுதுபோக்கு திரைப்படத்திற்காக மீண்டுமொருமுறை இணைந்துள்ளன.

இந்த கூட்டணியில் இது ஏழாவது படமாகும். இதற்கு முன்பாக அட்டகத்தி, சூதுகவ்வும், இன்று நேற்று நாளை, பீட்சா II வில்லா, காதலும் கடந்து போகும் மற்றும் இறைவி போன்ற வெற்றிப்படங்களை கூட்டாக இவர்கள் தயாரித்துள்ளனர். இன்னும் பெயரிடப்படாத ஒரு புதிய திரைப்படத்தை அண்டாவ காணோம் பட புகழ் வடிவேலு இயக்குகிறார். கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ் மற்றும் ஜாங்கோ உள்ளிட்ட திரைப்படங்களின் ஒளிப்பதிவாளரான கார்த்திக் கே தில்லை ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை லியோ ஜான் பால் கையாள்கிறார். நடிகர்கள் மற்றும் குழுவினர் குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும். பெரும் பொருட்செலவில் தயாராகவுள்ள இந்த திரைப்படம் அனைவரையும் கவரும் வகையில் இருக்கும் என்று படக்குழுவின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து