எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை ஆய்வகத்தில் 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள மரபணு பகுப்பாய்வுக் கூடத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து 91 பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று சென்னை, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கக வளாகத்தில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை ஆய்வகத்தில் 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள மரபணு பகுப்பாய்வுக் கூடத்தைத் திறந்து வைத்தார். மேலும், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் வாயிலாகத் திறன்மிகு உதவியாளர் நிலை-II (Skilled Assistant Grade-II) பணியிடத்திற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள 9 நபர்களுக்கும், கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கு 82 வாரிசுதாரர்களுக்கும் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
சட்டமன்றப் பேரவையில் 2.8.2021 அன்று நடைபெற்ற மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கான மானியக் கோரிக்கையின் போது மரபணு பகுப்பாய்வு கூடம் (Whole Genome Sequencing) ரூபாய் 4 கோடி செலவில் சென்னை, டி.எம்.எஸ். வளாகப் பொது சுகாதார ஆய்வகத்தில் நிறுவப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் விதமாக, டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள பொது சுகாதார ஆய்வகத்தில் 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள மரபணு பகுப்பாய்வுக் கூடத்தை தமிழக முதல்வர் திறந்து வைத்தார்.
கொரோனா நோய்த் தொற்றினை உருவாக்கும் வைரஸ், அதன் மரபணுவில் உண்டாகும் தொடர் மாற்றங்களினால் புதுவகையாக உருமாறி, நோய்த் தொற்றின் தாக்கத்தினைத் தீவிரப்படுத்துகிறது. உருமாறிய கொரோனா வைரஸ்களைக் கண்டறிய மரபணு பகுப்பாய்வகம் அவசியமாகும். இத்தகைய மரபணு பகுப்பாய்வகம், எந்த ஒரு மாநில அரசாலும் இதுவரை அமைக்கப்படவில்லை.
தமிழகத்தில் பரவும் கொரோனா வைரஸ்களின் உருமாற்றத்தினைக் கண்டறிய ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கர்நாடகா மற்றும் தெலுங்கானாவில் இயங்கும் மரபணு பகுப்பாய்வகங்களில் கொரோனா மாதிரிகள் அனுப்பப்பட்டு, பகுப்பாய்வு முடிவுகள் தாமதமாகப் பெறப்பட்டு வந்தது. தற்போது, இக்குறைகளைப் போக்கும் வகையில், பொது சுகாதாரத் துறையின்கீழ் இயங்கும் மாநிலப் பொது சுகாதார ஆய்வகத்தில் மரபணு பகுப்பாய்வுக்கூடம் நிறுவப்பட்டுள்ளது. இவ்வாய்வகத்தில் உருமாறிய கொரோனா வைரஸ்களை ஆரம்ப நிலையிலேயே விரைவாகக் கண்டறிந்து, அதனடிப்படையில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, கொரோனா நோயின் தாக்கத்தினைப் பெருமளவு தடுத்திட இயலும்.
மேலும், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் வாயிலாக தமிழ்நாடு மாநில சுகாதாரப் போக்குவரத்துத் துறைக்குத் திறன்மிகு நிலை-II பணியிடத்திற்குத் தேர்வு செய்யப்பட்ட 9 நபர்களுக்கும், கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கு மருத்துவக் கல்வித் துறையில் 51 வாரிசுதாரர்களுக்கும், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் துறையில் 15 வாரிசுதாரர்களுக்கும், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறையில் 15 வாரிசுதாரர்களுக்கும், டாம்ப்கால் நிறுவனத்தில் ஒரு வாரிசுதாரருக்கும் என 82 வாரிசுதாரர்களுக்கும், பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, தமிழக முதல்வர் 10 பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் மா. சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சிறப்புப் பணி அலுவலர் முனைவர் பி. செந்தில்குமார், தேசிய நலவாழ்வு குழுமத்தின் திட்ட இயக்குநர் டாக்டர் தாரேஸ் அகமது, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநர் எஸ். கணேசன், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து இயக்குநர் டாக்டர் டி.எஸ். செல்வவிநாயம், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர் டாக்டர் எஸ். குருநாதன், மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் ஆர். நாராயணபாபு, தமிழ்நாடு மாநிலச் சுகாதாரப் போக்குவரத்துத் துறை இயக்குநர் எஸ். நடராஜன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-09-2025.
17 Sep 2025 -
சற்று குறைந்த தங்கம் விலை
17 Sep 2025சென்னை, சென்னையில் ஆபரணத்தங்கம் விலை நேற்று சவரன் ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ,82,160க்கு விற்பனையானது.
-
இனி விருப்ப ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு சலுகைகள்: மத்திய அரசு அறிவிப்பு
17 Sep 2025புதுடெல்லி, 20 ஆண்டுகள் பணியாற்றி விருப்ப ஓய்வுபெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு சலுகைகளை மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
-
பெரியார் 147-வது பிறந்தநாள்: இ.பி.எஸ். உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் புகழஞ்சலி
17 Sep 2025சென்னை, பெரியாரின் பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தியுள்ளனர்.
-
தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
17 Sep 2025சென்னை, தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் மற்றும் 21 மாவட்டங்களில் இன்று (செப்.18-ம் தேதி) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்: அமித்ஷாவிடம் இ.பி.எஸ். நேரில் வலியுறுத்தல்
17 Sep 2025சென்னை, டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து தேச விடுதலைக்காக பாடுபட்ட பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க.
-
கொடிக்கம்பம் அகற்றும் நடவடிக்கை: தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் பாராட்டு
17 Sep 2025சென்னை, கொடிக்கம்பங்களை அகற்றும் நடவடிக்கைக்கு தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு பாராட்டு தெரிவித்துள்ளது.
-
தமிழ்நாட்டை தொடர்ந்து வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
17 Sep 2025சென்னை, தமிழ்நாட்டைத் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது
17 Sep 2025மேட்டூர், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு புதன்கிழமை காலை வினாடிக்கு 8,641 கன அடியாகக் குறைந்தது.
-
75-வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடிக்கு ட்ரம்ப் வாழ்த்து
17 Sep 2025புதுடெல்லி, பிரதமர் மோடிக்கு தொலைபேசியில் பி்றந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
-
தமிழ் இனத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவு பேரொளி பெரியார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
17 Sep 2025சென்னை, தமிழ் இனத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார் என அவரது பிறந்தநாளில் முதல்வர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
-
பிரதமர் மோடி பிறந்த நாளில் 12 ஆண்டுகளாக இலவச டீ வழங்கும் வியாபாரி..!
17 Sep 2025சென்னை, பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இலவசமாக டீயை வியாபாரி வழங்கினார்.
-
பிரதமர் நரேந்திரமோடிக்கு இத்தாலி பிரதமர் வாழ்த்து
17 Sep 2025ரோம், பிரதமர் மோடிக்கு இத்தாலி பிரதமர் மெலோனி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
திருப்பதி பிரம்மோற்சவ விழா: பாதுகாப்பு பணிக்கு 4,200 போலீசார் குவிப்பு
17 Sep 2025திருப்பதி, திருப்பதி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் 4,200 போலீசார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
-
யூடியூப் சேனல்கள் சமூகத்திற்கு சாபக்கேடு: சித்தராமையா பேச்சு
17 Sep 2025பெங்களூரு, யூடியூப் சேனல்கள் சமூகத்திற்கு ஒரு சாபக்கேடு என சித்தராமையா தெரிவித்துள்ளார்.
-
வைக்கோல் எரிக்கும் விவசாயிகள் சிலரை சிறையில் அடைக்கலாம்: டெல்லி காற்று மாசு வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து
17 Sep 2025புதுடெல்லி, வைக்கோல் எரிக்கும் விவசாயிகள் சிலரை சிறையில் அடைக்கலாம் என்று டெல்லி காற்று மாசு வழக்கில் சுப்ரீம் கோர்ட்கருத்து தெரிவித்துள்ளது.
-
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவப் படிப்புக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு இறுதி முடிவு 24-ம் தேதி வெளியீடு
17 Sep 2025சென்னை, எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவப் படிப்புக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு வரும் 24-ம் தேதி வரை நடக்கிறது.
-
விஜய் பரப்புரைக்கு அனுமதி கோரி ஐகோர்ட்டில் வழக்கு
17 Sep 2025சென்னை: விஜய் பரப்புரைக்கு அனுமதி கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
-
2025-ம் ஆண்டில் ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.22.08 லட்சம் கோடியாக அதிகரிப்பு: மத்திய நிதியமைச்சர் நிர்மலா தகவல்
17 Sep 2025அமராவதி, ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்கள் மூலம் பொருளாதாரத்தில் ரூ.2 லட்சம் கோடி முதலீடு ஏற்படும் என்று தெரிவித்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜி.எஸ்.டி.
-
இந்திய தயாரிப்பு பொருட்களை மட்டும் மக்கள் வாங்க வேண்டும்: பிரதமர் நரேந்திரமோடி கோரிக்கை
17 Sep 2025போபால், நீங்கள் வாங்கும் எந்தவொரு பொருளும் இந்திய தயாரிப்பு பொருளாக இருக்க வேண்டும் என 140 கோடி இந்தியர்களிடமும் பிரதமர் மோடி வேண்டுகோளாக கேட்டு கொண்டார்.
-
மயிலாடுதுறை ஆணவக்கொலை: பெண்ணின் தாய் உள்ளிட்ட 4 பேர் சிறையில் அடைப்பு
17 Sep 2025மயிலாடுதுறை: மயிலாடுதுறை ஆணவக் கொலை வழக்கில் பெண்ணின் தாய் உள்பட 4 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
-
திரைக்கலைஞர்களுக்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறுமா? ரஜினி அதிரடி பதில்
17 Sep 2025சென்னை: திரைக்கலைஞர்களுக்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறுமா? என்ற கேள்விக்கு நடிகர் ரஜினி பதில் அளித்துள்ளார்.
-
மனிதர்களை கடிக்கும் நாய்களுக்கு ஆயுள் தண்டனை: உ.பி அரசு முடிவு
17 Sep 2025டெல்லி: எந்தவித தூண்டுதலும் இல்லாமல் மனிதர்களை கடிக்கும் நாய்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்க உத்தரபிரதேச அரசு முடிவு செய்துள்ளது.
-
அண்டை நாடுகளுடனும் பாகிஸ்தான் நட்புறவையே நாடுகிறது: துணை பிரதமர்
17 Sep 2025தோஹா: இந்தியா உட்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் பாகிஸ்தான் நட்புறவையே நாடுகிறது என்றும் இருதரப்பு விவகாரங்களில் 3-ம் தரப்பின் மத்தியஸ்தத்தை ஏற்க பாகிஸ்தான் தயார் என்றும்
-
டேராடூன் நகருக்கு மீண்டும் ரெட் அலர்ட்
17 Sep 2025உத்தரகாண்ட்: டேராடூன் நகருக்கு மீண்டும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.