200-க்கு 200 மதிப்பெண் பெற்று 13 பேர் முதலிடம்: பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு : ஆன்லைனில் இன்று கவுன்சிலிங் தொடங்குகிறது: அமைச்சர்

Ponmudi 2021 07 01

Source: provided

சென்னை  : பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் நேற்று ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது. இதை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார். இதில் 13 மாணவர்கள் முழு மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டது. முன்னதாக பொறியியல் படிப்புகளில் சேர 1,74,930 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். அதில் 1,45,045 மாணவர்கள் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி இருந்தனர். 

13 மாணவர்கள் முதலிடம்

இந்த ஆண்டு 1,39,033 பேரிடம் இருந்து தகுதியான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில், 87291 பேர் மாணவர்கள். 51730 பேர் மாணவிகள். மூன்றாம் பாலினத்தவர் 12 பேர். இவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியாகியுள்ளது. இந்தப் பட்டியலில் 13 மாணவர்கள் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்று, முதலிடத்தைப் பெற்றுள்ளனர்.

440 கல்லூரிகள் பங்கேற்பு

தமிழகத்தில் இந்தக் கல்வி ஆண்டில் அரசு, தனியார் கல்லூரிகளில் 440 கல்லூரிகள் மட்டுமே பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்கின்றன. அதன்படி, ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 870 இடங்கள் மட்டுமே கலந்தாய்வுக்குக் கிடைத்துள்ளன. கடந்த ஆண்டில் 461 கல்லூரிகளில் ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 154 இடங்கள் கலந்தாய்வுக்குக் கிடைத்தன.  

இதனால் கடந்த ஆண்டைவிட தற்போது 11,284 இடங்கள் குறைந்துள்ளன. விண்ணப்பித்தவர்களைவிட இடங்கள் எண்ணிக்கையும் குறைவாகவே உள்ளது. இதனால் விண்ணப்பித்த மாணவர்கள் அனைவருக்கும் பொறியியல் படிப்புக்கான இடம் கிடைப்பது உறுதியாகி உள்ளது. மாணவர்கள் தங்களுடைய தரவரிசைப் பட்டியலைக் காண: https://www.tneaonline.org/ என்ற முகவரியைக் காணலாம்.

440 கல்லூரிகள் பங்கேற்பு

நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நடத்த தமிழகத்தில் இருந்து 529 பொறியியல் கல்லூரிகள் ஏ.ஐ.சி.டி.இ.-யிடம் விண்ணப்பித்திருந்தது. இதில் 15-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் உரிய சான்றிதழை சமர்ப்பிக்காததால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. 20-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் அங்கீகார விண்ணப்பத்தைத் திரும்பப் பெற்றது. மேலும், போதிய உள்கட்டமைப்பு, ஆசிரியர் தகுதி உள்ளிட்ட அடிப்படை வசதி இல்லாத கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்க ஏ.ஐ.சி.டி.இ. மறுத்து விட்டது.  இதனால், நடப்பு கல்வியாண்டில் தமிழகத்தில் 440 கல்லூரிகள் மட்டுமே பொறியியல் கலந்தாய்வில் கலந்து கொள்கின்றன.  அதன்படி, ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 870 இடங்கள் மட்டுமே கலந்தாய்வுக்கு கிடைத்துள்ளது. கடந்த ஆண்டில் 461 கல்லூரிகளில் ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 154 இடங்கள் கலந்தாய்வுக்கு கிடைத்தது.  ஆனால் கடந்த ஆண்டை விட தற்போது 11 ஆயிரத்து 284 பொறியியல் இடங்கள் குறைந்துள்ளது.

கவுன்சிலிங் தொடர்பாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அண்ணா பல்கலைக் கழகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆன்லைனில் இன்று கவுன்சிலிங் துவக்கம்

மாணவர்கள் தரவரிசை பட்டியல் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் ஆன்-லைனில் நடைபெறும்.  முதற்கட்டமாக தொழிற்கல்வி பிரிவில் விண்ணப்பித்த 2,060, விளையாட்டு பிரிவில் விண்ணப்பித்துள்ள 1,190, முன்னாள் ராணுவத்தினர் வாரிசுகள் பிரிவில் விண்ணப்பித்துள்ள 1,124, மாற்றுத்திறனாளிகள் பிரிவில் விண்ணப்பித்த 182 மாணவ- மாணவிகளுக்கான சிறப்பு கலந்தாய்வு இன்று (15-ம் தேதி) தொடங்குகிறது. 

18-ல் முதல்வர் அனுமதி கடிதம் வழங்குகிறார்

அரசு பள்ளி மாணவர்கள் 15 ஆயிரத்து 660 பேரும் விண்ணப்பித்துள்ளார்கள். அவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் படி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். இதில் முதல் இடங்களை பிடிப்பவர்களுக்கு வருகிற 18-ம் தேதி அண்ணா பல்கலைக் கழகத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுமதி கடிதங்களை வழங்குவார். 

5 கட்ட கலந்தாய்வு

வழக்கமாக அண்ணா பல்கலைக் கழகத்தில் ஒரே ஒரு முறை மட்டுமே கவுன்சிலிங் நடத்தப்படுவதால் காலியாகும் இடங்கள் காலியாகவே இருக்கும். ஆனால் இந்த ஆண்டு இடங்கள் காலியாவதை பொறுத்து 5 கட்டங்களாக கவுன்சிலிங் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.  இடங்கள் குறைவாக இருந்தாலும் விண்ணப்பித்த அனைவருக்கும் சீட் கிடைக்க வாய்ப்பு உண்டு. அரசு பள்ளி மாணவர்களில் 11 ஆயிரத்து 390 பேருக்கு இடம் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து