எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மாஸ்கோ : ரஷ்யாவின் அதிபர் புடின் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாக ரஷ்யாவின் அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.
உலக அளவில் கொரோனா வைரஸ் அதிகம் பாதித்த நாடுகளில் ஒன்று ரஷ்யா. கொரோனா அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், இங்கிலாந்துக்கு அடுத்த இடத்தில் ரஷ்யா உள்ளது. ரஷ்யாவில் இதுவரை 71லட்சத்து 76,085- பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொற்று பாதிப்பால் 1.94 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதும் அந்நாட்டில் தினசரி பாதிப்பு ஏறத்தாழ 17 ஆயிரத்தை நெருங்கி பதிவாகி வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக முதன் முதலாக தடுப்பூசி கண்டறிந்ததாக அறிவித்துக்கொண்ட ரஷ்யா, இன்னும் தொற்று பாதிப்பை முழுமையாக கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறி வருகிறது.
இந்த நிலையில், ரஷ்யாவின் அதிபர் புடின் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக ரஷ்யாவின் அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது. புடினுடன் தொடர்பில் இருந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, புதின் சுய தனிமைப்படுத்திக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக புடினின் தஜிகிஸ்தான் சுற்றுப்பயணமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. புடின் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் போட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


