Idhayam Matrimony

பாக். எல்லையில் பசி, பட்டினியுடன் காத்திருக்கும் ஆப்கானியர்கள்

செவ்வாய்க்கிழமை, 14 செப்டம்பர் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

இஸ்லாமாபாத் : தாலிபான்களின் கைகளில் ஆப்கானிஸ்தான் மீண்டும் சிக்கிவிட்டதை தொடர்ந்து அந்த நாட்டில் இருந்து பல ஆயிரம் பேர் தப்பிச்சென்று பாகிஸ்தான் எல்லை அருகே காத்திருப்பது செயற்கைகோள் படங்கள் மூலம்  உறுதியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானின் தெற்கு காந்தஹார் மாகாணத்தின் ஸ்பின்போல்டாக் மாவட்டத்தில் உள்ள சாமான் பார்டர் எல்லையில் பல்லாயிரக்கணக்கானோர் குவிந்துள்ளனர். தங்கள் குழந்தைகள் மற்றும் உடமைகளை வைத்துக்கொண்டு பாகிஸ்தான் எல்லையில் அவர்கள் கால் கெடுக்க நின்று கொண்டிருப்பது உறுதியாகியுள்ளது. இந்த செயற்கைகோள் படம் கடந்த 6-ம் தேதி எடுக்கப்பட்டதாகும். அந்த மக்கள் பாகிஸ்தானுக்குள் தஞ்சம் புகுந்தார்களா? என்பது தெரியவில்லை.

காபூல் விமான விமான நிலையம் மீண்டும் தாலிபான்களின் வசம் வந்துவிட்டதால் அங்கிருந்து விமானங்கள் மூலம் வெளிநாடுகளுக்கு தப்பி செல்வது இயலாத காரியமாக மாறியுள்ளது. இதனால் பாகிஸ்தான் எல்லைகளான டோர்காக், ஸ்பின்போல்டாக், தஜிகிஸ்தான் எல்லையான ஷிர்கான், ஈரான் எல்லையான இஸ்லான் குவாலா ஆகிய பாதைகள் மூலம் ஆப்கானியஸ்தர்கள் உயிர் தப்பி வருகின்றனர். தாலிபான்களின் ஆட்சி எவ்வளவு கோரமாக இருக்கும் என்பதற்கு அங்கிருந்து தப்பியோடும் சொந்த நாட்டு மக்களின் நிலையே கட்டியம் கூறுவதாக இருக்கிறது.

இந்த செயற்கைக் கோள் புகைப்படம் கடந்த 6 ம் தேதி எடுக்கப்பட்டது . பாகிஸ்தான் அண்மையில் ஆப்கனிஸ்தானுடனான சமான் எல்லையை மூடியது . ஆனால் , எல்லை திறக்கப்படலாம் என்ற நம்பிக்கையுடன் உடைமைகளுடன் ஆப்கானிஸ்தான் மக்கள் காத்திருக்கின்றனர் .

பாகிஸ்தான் , சீனா , ஈரான் , தஜிகிஸ்தான் , உஸ்பெகிஸ்தான் , துர்க்மேனிஸ்தான் ஆகிய நாடுகளுடன் , ஆப்கானிஸ்தான் எல்லைகளைப் பகிர்ந்து கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது .

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 7 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 7 hours ago
View all comments

வாசகர் கருத்து