முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செல்வமகள் சேமிப்பு திட்டம்: தமிழக அரசு புதிய அறிவிப்பு

புதன்கிழமை, 15 செப்டம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டம் குறித்து தமிழக அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, 

தமிழ்நாடு அரசு பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்திய அஞ்சல் துறையின் சார்பில் செல்வமகள் சேமிப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் அதிகபட்சமாக ஒரு குடும்பத்திற்கு 2 பெண் குழந்தைகள் இத்திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம். இக்கணக்கை தொடங்குவதற்கு குறைந்த பட்சமாக ரூ.250 செலுத்த வேண்டும். மேலும் ஆண்டு ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூபாய் 250 அதிகபட்சமாக ரூபாய் 1,50,000 வைப்பு தொகை செலுத்தலாம்.

சேமிக்கும் தொகைக்கு ஆண்டு ஒன்றிற்கு 7.6 சதவீத வட்டி பெறலாம் . திட்டத்தின் மதிப்பு தொகையில் 50 சதவீத வைப்புத் தொகையைத் பெண் குழந்தையின் மேற்படிப்பிற்காக பெற்றுக் கொள்ளலாம். முதிர்வு தொகையை பெண் குழந்தையின் திருமணத்தின் போது அல்லது 21 வயது நிறைவு பெற்றவுடன் பெற்றுக் கொள்ளலாம். இத்திட்டத்தின் முதிர்வு தொகைக்கு வரி விலக்கு உண்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து