முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குஜராத்தில் அமைச்சரவை மாற்றியமைப்பு புதிய மந்திரிகளாக 24 பேர் பதவியேற்பு

வியாழக்கிழமை, 16 செப்டம்பர் 2021      இந்தியா
Image Unavailable

குஜராத் மாநில முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி அமைச்சரவையில் இடம் பெற்று இருந்த அனைத்து அமைச்சர்களும் வெளியேற்றப்பட்டு, 24 அமைச்சர்களும் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர்.

குஜராத் மாநில பா.ஜ.க. முதல்வராக இருந்த விஜய் ரூபானி, தனது முதல்வர் பதவியை கடந்த சில நாட்களுக்கு முன் ராஜினாமா செய்தார். அவருக்கு மாற்றாக எம்.எல்.ஏ. பூபேந்திர படேல் என்பவர் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். 

இதையடுத்து காந்திநகரில் உள்ள ஆளுனர் மாளிகையில் நேற்று நடைபெற்ற விழாவில், ஆளுநர் ஆச்சாரியா தேவர் புதிய அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

புதிய அமைச்சரவையில் 10 கேபினட் அமைச்சர்களும் தனி பொறுப்புடன் கூடிய 5 இணை அமைச்சர்களும் 9 இணை அமைச்சர்களும் இடம் பெற்றுள்ளனர். விஜய் ரூபானியின் அமைச்சரவையில் இடம் பெற்று இருந்த ஒருவர் கூட புதிய அமைச்சரவையில் இடம் பெறாதது சர்ச்சையை கிளப்பியுள்ளது. விஜய் ரூபானிக்கு பிறகு முதல்வர் ஆவார் என்று கூறப்பட்ட நிதின் படேல் கூட அமைச்சரவையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். அமைச்சராக பதவி ஏற்றத்தை அடுத்து சபாநாயகர் பதவியை ராஜேந்திர திவேதி ராஜினாமா செய்தார்.

 

அமைச்சரவை முற்றிலுமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ள நிலையில், அமைச்சர்களுக்கான இலக்காக்கள் விரைவில் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.பா.ஜ.க.வின் இந்த நடவடிக்கை மூத்த தலைவர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து