ஹேப்பி பர்த்டே மோடி ஜி - ராகுல்காந்தி வாழ்த்து

Rahul 2021 07 30

பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் 71-வது பிறந்ததினம் நேற்று கொண்டாடப்பட்டது. பிரதமர் மோடி கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராகப் பொறுப்பேற்றார். அன்றுமுதல் அவரின் ஒவ்வொரு ஆண்டு பிறந்தநாளும் சேவைநாளாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அந்த நாளில் நாடுமுழுவதும் மக்களுக்கு பல்வேறு இலவச சேவைகளை பா.ஜ.க.வினர் வழங்கி வருகிறார்கள். பிரதமர் மோடிக்கு பல்வேறு தலைவர்களும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

 

இதுதொடர்பாக ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மோடி ஜி" என்று மட்டும் தெரிவித்துள்ளார். வேறு எதையும் அவர் குறிப்பிடவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து