முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீரஜ் சோப்ராவின் சமூக வலைதள மதிப்பு ரூ. 428 கோடியாக உயர்வு

ஞாயிற்றுக்கிழமை, 19 செப்டம்பர் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

சண்டிகர்: இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவின் சமூக வலைதளங்களின் மதிப்பு 428 கோடியாக அதிகரித்துள்ளது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கப் பதக்கம்... 

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் பெற்றுத் தந்து சரித்திர சாதனை நிகழ்த்தினார் நீரஜ் சோப்ரா. அதனை தொடர்ந்து பாராட்டு  நிலையில் நனைந்த அவருக்கு மாநில அரசுகள், விளையாட்டு அமைப்புகள் மற்றும் நிறுவனகங்களிடம் இருந்து பரிசுகளும் குவிந்தன.

வலைதள பதிவு... 

அந்த வகையில் சமூக வலைதளங்களிலும் நீரஜ் சோப்ராவுக்கு செல்வாக்கு அதிகரித்தது. பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அவரை பின்தொடர்வோர் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வந்தது. மேலும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த போது உலக அளவில் சமூக வலைதள பதிவுகளில் அதிகம் குறிப்பிடப்பட்ட வீரர் என்ற பெருமையை தனதாக்கினார்.

ரூ. 428 கோடி...

இந்த நிலையில் யூகோவ் ஸ்போர்ட் என்ற நிறுவனத்தின் ஆய்வு முடிவுகளின்படி, சமூக வலைதளங்களில் செல்வாக்கு அதிகரிப்பதன் மூலம், நீரஜ் சோப்ராவின் சமூக வலைதள மதிப்பு 428 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இன்ஸ்டாகிராமில் அவரை பின்தொடர்வோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 297 சதவீதம் அதிகரித்துள்ளது. 

45 லட்சத்திற்கும்... 

அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை 45 லட்சத்திற்கும் அதிகமானோர் பின்தொடர்கிறார்கள். சமூக வலைதளங்களில் அதிகமான பின்தொடர்வோரை வைத்திருப்போர் வணிக ரீதியில் வெளியிடும் விளம்பரங்களுக்கு, விளம்பரதாரர் தரப்பில் கட்டணம் செலுத்தப்படுகிறது. குறிப்பாக இன்ஸ்டாகிராமில் பிரபலமாக இருக்கும் நடிகை பிரியங்கா சோப்ரா தன்னுடைய ஒரு விளம்பர பதிவுக்கு 3 கோடி ரூபாய் வரையில் வருவாயாக ஈட்டுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 2 months 3 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 3 months 2 weeks ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 4 months 1 week ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 4 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து