மும்பைக்கு எதிரான வெற்றி: ருதுராஜ் - பிராவோவுக்கு கேப்டன் டோனி புகழாரம்

Dhoni Hail 2021-09-20

ஐ.பி.எல் 2021 டி-20 கிரிக்கெட் தொடரின் 30-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 

நடப்பு சாம்பியன்...

14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் முதல் கட்ட ஆட்டங்கள் ஏப்ரல் 9 முதல் மே 2 வரை இந்தியாவில் நடைபெற்றது. 2-வது கட்ட ஆட்டங்கள் ஐக்கிய அரபு எமிரேட்சில் நேற்று முன்தினம் தொடங்கியது. துபாயில் நடந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ரன் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்சை வீழ்த்தியது.

எதிர்பார்ப்பையும்... 

இந்த ஆட்டம் குறித்து சி.எஸ்.கே கேப்டன் எம்.எஸ்.டோனி கூறும்போது, “30/4 என்ற நிலையில் மரியாதைக்குரிய ஒரு இலக்கை எட்டியாக வேண்டும். ருதுராஜ், பிராவோ எங்கள் எதிர்பார்ப்பையும் தாண்டிய ஒரு இலக்கிற்கு வழிவகுத்தனர். நாங்கள் 140 தான் வரும் என்று நினைத்தோம் ஆனால் ருது, பிராவோ 160 பக்கம் கொண்டு வந்தது அட்டகாசம். பிட்ச் இருவிதமாக இருந்தது, தொடக்கத்தில் கொஞ்சம் ஸ்லோவாக இருந்தது.

பிட்சில் கடினம்...

அதனால்தான் நான் முன்னால் இறங்கினேன், ஏனெனில் பின்னால் இறங்கி ஆடுவது இந்தப் பிட்சில் கடினம். என்ன நடக்கிறது என்பதை அறியாமல் நாம் கடைசியில் கடினமாக மட்டையைச் சுழற்றி பயனில்லை. அந்த தொடக்க சரிவிலிருந்து மீள்வது கடினம் ஆனால் சென்சிபிள் ஆக ஆடி அருமையாக பினிஷ் செய்தோம். 

ராயுடு காயம்... 

அம்பர்த்தி ராயுடு காயம் அடைந்தார். அதில் இருந்து மீண்டு வருவது கடினமாக இருந்தது. ஆனால் நாங்கள் சிறப்பாக பேட்டிங் செய்தோம். ஒரு பேட்ஸ்மேன் இறுதி வரை களத்தில் நிற்பது புத்திசாலித்தனமானது. இவ்வாறு டோனி கூறி உள்ளார்.

9-வது ஆட்டம்... 

 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்த ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை 24-ம் தேதி சார்ஜாவில் எதிர்கொள்கிறது. 4-வது தோல்வியை தழுவிய மும்பை அணி 9-வது ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்சை 23-ம் தேதி அபுதாபியில் சந்திக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து