முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பைக்கு எதிரான போட்டியில் காயம்: அம்பட்டி ராயுடு, தீபக் நிலை குறித்து பிளெமிங் விளக்கம்

திங்கட்கிழமை, 20 செப்டம்பர் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

துபாய் : மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் காயமடைந்த அம்பட்டி ராயுடு, தீபக் சஹார் ஆகிய இரு வீரர்களின் காயங்கள் பற்றிய நிலவரத்தை சி.எஸ்.கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் கூறியுள்ளார்.

சென்னை வெற்றி...

ஐ.பி.எல் போட்டியின் 30-வது ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் 20 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வென்றது. துபையில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை பேட்டிங்கை தோ்வு செய்தது. சென்னை 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய மும்பை 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 136 ரன்களே அடித்தது. சென்னை வீரா் ருதுராஜ் ஆட்டநாயகன் ஆனார்.

முழங்கையில் காயம்... 

இந்நிலையில் இந்த ஆட்டத்தில் ராயுடு பேட்டிங் செய்தபோது மில்ன் வீசிய பந்தினால் அவருடைய முழங்கையில் காயம் ஏற்பட்டது. இதனால்  நிலை தடுமாறி கீழே விழுந்த ராயுடு மேலும் விளையாட முடியாமல் ஓய்வறைக்குத் திரும்பினார். இதேபோல மும்பை இன்னிங்ஸில் சி.எஸ்.கே வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹாருக்குத் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இதனால் இருவரும் அடுத்த ஆட்டங்களில் விளையாடுவார்களா என்கிற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

பிரச்னையும் இல்லை...

இதையடுத்து சி.எஸ்.கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் கூறியதாவது., ராயுடுவின் எக்ஸ்ரேவில் எவ்விதப் பிரச்னையும் இல்லை. சிராய்ப்பு தான் ஏற்பட்டுள்ளது. எலும்புமுறிவு ஏற்பட்டிருக்குமோ என நாங்கள் பயந்தோம். தீபக் சஹாருக்குத் தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளது. அதை நாங்கள் பரிசோதித்து வருகிறோம். இருவரும் நலமுடன் விரைவில் திரும்பி வருவார்கள் என நம்புகிறோம் என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து