முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிட்ச் குறித்து கொஞ்சம் கவலைப் பட்டோம்: வெற்றிக்கு பிறகு கேப்டன் டோனி பேட்டி

திங்கட்கிழமை, 27 செப்டம்பர் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

அபு தாபி: அபு தாபியில் நடைபெற்ற ஐ.பி.எல் 38-வது த்ரில் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது. இதன் மூலம் பாயிண்ட்ஸ் டேபிளில் முதலிடம் பிடித்தது. வெற்றிக்கு பிறகு பேசிய கேட்டன் டோனி பிட்ச் குறித்து கொஞ்சம் கவலைப் பட்டோம் என்று தெரிவித்துள்ளார்.

சுனில் நரைன்... 

பிரசித் கிருஷ்ணா 3 ஓவர்களில் 18 ரன்களையே விட்டுக்கொடுத்திருந்தார் கடைசி ஓவரில் தேவையில்லாமல் சில மாற்றங்களைச் செய்ய ஜடேஜா 2 சிக்ஸ், 2 பவுண்டரி என்று 22 ரன்கள் அந்த ஓவரில் வர கடைசி ஓவரில் 4 ரன்கள் வெற்றிக்குத் தேவை எனும்போது சுனில் நரைன் மிகப்பிரமாதமாக வீசினார். சாம் கரன், ஜடேஜாவை வீட்டுக்கு அனுப்பினார் சுனில் நரைன். கடைசி பந்தை சாகர் மிட்விக்கெட்டில் அடித்து வெற்றி ரன்னை எடுக்க சி.எஸ்.கே கேம்ப்பில் கொண்டாட்டம். கொல்கத்தா பிரமாதமாக ஆடி ஏமாற்றம் அளித்தது.

ஜடேஜா அபாரம்...

சி.எஸ்.கே ஒரு கட்டத்தில் 142/6 என்று தடுமாறியது அந்தக் கட்டத்திலிருந்து போட்டியை விடுவது, அல்லது விட்டுக்கொடுப்பது உஷ்கண்டுக்கதீங்க தருணமா என்று  தெரியவில்லை.  நன்றாக ஆடாத போதும் வெற்றி பெறுகிறோம் என்று டோனியே கூறுகிறார் என்றால் ஒருவேளை உஷ் கண்டுக்காதீங்க தருணமாக இருக்குமோ என்ற ஐயம் எழுகிறது. 10 பந்துகளில் 24 ரன்கள் வெற்றிக்குத் தேவை எனும்போது பிரசித் கிருஷ்ணாவுக்கு ஜடேஜா அதிர்ச்சி அளித்தார்.

காரணம் அதுவரை, அந்த ஓவரிலேயே முதல் 2 பந்துகளை நன்றாக வீசிய பிரசித் கிருஷ்ணா லெக் ஸ்டம்பில் கொண்டு போய் ஒரு ஸ்லோ பந்தை ஷார்ட் பிட்ச் ஆக வீசினால் யார்தான் அடிக்க முடியாது, சிக்ஸ்! அடுத்த பந்தை கொண்டு போய் ஒரேயடியாக ஃபுல் லெந்தில் வீச ஜடேஜ லாங் ஆனில் சிக்ஸ் விளாசினார், ஜடேஜா நன்றாக அந்தப் பந்தை பிக் செய்தாலும் இந்த இரண்டு பந்து பிறகு அடுத்த 2 பந்துகள் ஃபுல்டாஸ் என்பது  ‘உஷ் கண்டுக்காதீங்க’ போல்தான் தெரிகிறது.

பிரமாதமானது...

இந்த வெற்றி குறித்து டோனி கூறியதாவது: “இந்த வெற்றி பிரமாதமானது. சில சமயங்களில் நல்ல கிரிக்கெட் ஆட்டத்தை ஆடி தோற்போம். ஆனால் சில சமயங்களில் நன்றாக ஆட மாட்டோம் ஆனாலும் வெற்றி பெறுவொம், இது மகிழ்ச்சி தருவதுதான். இந்த ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்ததில் மகிழ்ச்சி. ஆங்காங்கே நன்றாக வீசினோம். வேகப்பந்து வீச்சுக்கு ஏற்ற பிட்ச் அல்லட் இது.

நினைத்தோம்...

அதனால் அவர்களுக்கு ஷார்ட் ஸ்பெல்களாகக் கொடுத்தோம், 170 எடுக்கக் கூடியதுதான் என்று நினைத்தோம். ஜடேஜா வீசும்போது பந்து நன்றாக மட்டைக்கு வந்தது, பந்து நின்று வரவில்லை. நாங்கள் இலக்கை விரட்ட ஆரம்பித்ததை வைத்துப் பார்க்கும்போது கொல்கத்தா மீண்டும் எழுந்து ஆட்டத்தை மாற்றியதற்கு பாராட்டுக்கள். ஒரு பிட்சில் தொடர்ந்து ஆடினால் கிரவுன்ட்ஸ்மென் அதிக தண்ணீர் விட்டு கொஞ்சம் புற்களை விட்டு வைப்பார்கள். அதனால்தான் பிட்ச் குறித்து கொஞ்சம் கவலைப் பட்டோம்” என்றார் டோனி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து