Idhayam Matrimony

பைஸர் நிறுவனத்தின் 'பூஸ்டர் தடுப்பூசியை' செலுத்திக் கொண்டார் : அதிபர் ஜோ பைடன்

செவ்வாய்க்கிழமை, 28 செப்டம்பர் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

 

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

நோய்த்தொற்றால் எளிதில் பாதிக்கக்கூடிய 65 வயதைக் கடந்தவர்களுக்கும், நோய் எதிர்ப்புத் தன்மை குறைவாக உள்ளவர்களுக்கும் மூன்றாவது டோஸ் தடுப்பூசி (பூஸ்டர்) போட அனுமதி வழங்கப்படுகிறது. இதன் மூலம் நாட்டின் பொது சுகாதாரத் தேவைகளுக்குச் சிறந்த சேவையை வழங்க முடியும் என அமெரிக்க நோய்த் தடுப்பு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் ஜோ பைடன், பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “அமெரிக்க வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடன் பூஸ்டர் (மூன்றாவது) தடுப்பூசி போட்டுக் கொண்டார். சுகாதார அதிகாரிகளின் அறிவுரைப்படி பைடனுக்கு பைஸர் நிறுவனத்தின் பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜோ பைடன் கூறும்போது, “நான் 65 வயதைக் கடந்துவிட்டேன். ஆனால், என்னைப் பார்த்தால் அப்படித் தெரியாது” என்று கூறினார்.

அமெரிக்கா தனது குடிமக்களில் 75% மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. டெல்டா வைரஸ் காரணமாக அமெரிக்காவில் கொரோனா தொற்று அதிகரித்தது. அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 80 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 600 பேருக்கு மேல் பலியாகி உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து