முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேப்டன் பதவியில் இருந்து விலகுமாறு கோலிக்கு அழுத்தம் கொடுக்கவில்லை பி.சி.சி.ஐ பொருளாளர் விளக்கம்

வியாழக்கிழமை, 30 செப்டம்பர் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மும்பை: கேப்டன் பதவியில் இருந்து விலகுமாறு விராட் கோலிக்கு அழுத்தம் கொடுக்கவில்லை என்றும், யாரையும் தரம் தாழ்த்தும் எண்ணத்தில் எம்.எஸ். டோனியை இந்திய அணிக்கு ஆலோசகராக நியமிக்கவில்லை என்றும் பி.சி.சி.ஐ பொருளாளர் விளக்கமளித்துள்ளார்.

ஆலோசகராக... 

வரும் அக்டோபர் 17-ம் தேதி ஆரம்பமாக உள்ள ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் ஆலோசகராக நியமிக்கிப்பட்டுள்ளார் மகேந்திர சிங் டோனி. இந்நிலையில், டோனி அந்த பொறுப்பில் நியமிக்கப்பட்டதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பொருளாளர் அருண் துமால். 

பிரம்மிக்கத்தக்கவை... 

“டோனி ஒரு சிறந்த தலைவர். அவரது தலைமையின் கீழ் இந்தியா 2007 டி20 உலகக் கோப்பை, 2011 50 ஓவர் உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி மாதிரியான முக்கிய தொடர்களை இந்தியா வென்றுள்ளது. அவரது சாதனைகள் பிரம்மிக்கத்தக்கவை. அவரை அணியின் ஆலோசகராக கொண்டிருப்பது சிறப்பானதாகும். அணியில் அவருக்குள்ள மதிப்பும், மரியாதையும் வேற லெவல். யாரையும் தரம் தாழத்தவோ, குறைத்து மதிப்பிடவோ அவரை நியமிக்கவில்லை” என தெரிவித்துள்ளார் அருண் துமால். 

அதே போல கோலியை கேப்டன் பதவியில் இருந்து விலக சொல்லி பி.சி.சி.ஐ தரப்பில் எந்தவித அழுத்தமும் கொடுக்கவில்லை. அது அவரது தன்னிச்சையான முடிவு என தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து