எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மதுரை : சீமான் மீது டி.ஐ.ஜி., வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு மதுரை ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தூண்டுதல் பேரில் அவரது கட்சியினர் தம் மீதும், தம் குடும்பத்தினருக்கு எதிராகவும் சமூக வலை தளங்களில் அவதூறு கருத்துகள் பதிவிட்டு வந்தனர் என்பது திருச்சி டி.ஐ.ஜி. வருண்குமார் குற்றச்சாட்டு ஆகும்.
இது தொடர்பாக, சீமானுக்கு எதிராக வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கு திருச்சி 4வது குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அண்மையில் இந்த வழக்கில் கோர்ட்டில் சீமான் ஆஜராகி விளக்கம் அளித்து இருந்தார்.
அதே சமயத்தில் சீமான் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி மதுரை ஐகோர்ட்டில் நாம் தமிழர் தரப்பில் மனு அளிக்கப்பட்டு இருந்தது. இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிமன்றம், சீமான் மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. அடுத்தக்கட்ட விசாரணை ஆக.4ம் தேதி நடைபெறும் என்று கூறி வழக்கை நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


