முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கனமழை, திடீர் வெள்ளப்பெருக்கு: இமாச்சலப்பிரதேசத்தில் 10 பேர் பலி

புதன்கிழமை, 2 ஜூலை 2025      இந்தியா
Himachal--heavy-rain

Source: provided

சிம்லா : இமாச்சலப் பிரதேசத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை, மேகவெடிப்பு மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக கடந்த 32 மணி நேரத்தில 10 பேர் உயிரிழந்தனர், 34 பேர் காணாமல் போயினர். மாநிலம் முழுவதும் நூற்றுக்கணக்கான சாலைகள் மற்றும் மின்மாற்றிகள் சேதமடைந்தன.

செவ்வாய்க்கிழமை மாநிலம் முழுவதும் 11 மேக வெடிப்பு சம்பவங்கள், 4 இடங்களில் திடீர் வெள்ளம் மற்றும் ஒரு பெரிய நிலச்சரிவு சம்பவங்கள் நடந்தன. அவற்றில் பெரும்பாலானவை மண்டி மாவட்டத்தில் நடந்தன. திங்கள்கிழமை மாலை முதல் மண்டியில் மட்டும் 253.8 மிமீ மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மாநிலத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட நகரங்களான கோஹர், கர்சோக் மற்றும் துனாக் ஆகிய இடங்களில் தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையின் தலா இரண்டு குழுக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. கடந்த 32 மணி நேரத்தில் மட்டும் மண்டியில் இருந்து 316 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், ஹமீர்பூரில் 51 பேரும், சம்பாவில் மூன்று பேரும் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாநிலம் முழுவதும் தற்போது சுமார் 406 சாலைகள் மூடப்பட்டுள்ளன, அவற்றில் 248 சாலைகள் மண்டியை சேர்ந்தவை. மண்டியில் மின்சாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, 994 மின்மாற்றிகள் துண்டிக்கப்பட்டுள்ளன என மாநில அரசு தெரிவித்தது. காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்கவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களை மீட்கவும் மீட்புக் குழுக்கள் மற்றும் காவல்துறை 24 மணி நேரமும் பணியாற்றி வருவதாக மண்டி துணை ஆணையர் அபூர்வ் தேவ்கன் தெரிவித்தார்.

ஜூன் 20-ம் தேதி பருவமழை தொடங்கியதிலிருந்து இமாச்சலப் பிரதேசம் ரூ.500 கோடி இழப்பைச் சந்தித்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது என்று அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து