எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களின் வீடுகளுக்கே சென்று கற்பிக்கும் மக்கள் பள்ளி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நடப்பு கல்வியாண்டில் 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 1-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. 1 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் 1-ம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்கும் என அரசு அறிவித்துள்ளது.
அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு கல்வித் தொலைக்காட்சி மூலம் பாடம் நடத்தினாலும் அவர்களிடம் கற்றல் குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது. அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் குறைபாடுகளை போக்குவதற்கு நடப்பு கல்வியாண்டிற்கான பட்ஜெட்டில் 200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் பள்ளிக்கல்வித்துறை மாணவர்களின் கற்றல் குறைப்பாடுகளை தீர்க்கவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அதன் அடிப்படையில், கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக 1 முதல் 8-ம் வகுப்புகள் வரை அரசுப் பள்ளிகளில் படிக்கும் கற்றல் இடைவெளி மற்றும் கற்றல் இழப்பை குறைப்பதற்காக தினமும் 1 மணி முதல் 1 மணி 30 நிமிடம் வரையில் தன்னார்வலர்களைக் கொண்டு குறைதீர் கற்றல் செயல்பாடுகளை மேற்கொள்ளும் வகையில் 'மக்கள் பள்ளி' என்கிறத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்த திட்டம் குறித்து அக்டோபர் 2-ம் தேதி நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் பள்ளிக்கல்வித்துறை குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. மக்கள் பள்ளித்திட்டம் அனைத்து அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி நலனுக்காக செயல்படுத்தப்பட உள்ளது. எனவே கிராமசபை கூட்டத்தில் இது குறித்தும் விவாதிக்கவும், கல்வித்துறை அலுவலர்கள் கிராமசபை கூட்டங்களில் கலந்துக் கொண்டு ஆலோசனைகளை வழங்க வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


