எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாங்கள் துபாயில் விளையாடினாலும், சென்னையில் விளையாடியதுபோல் உணர்கிறோம் எனவும் சென்னை ரசிகர்களுக்காக விரைவில் சென்னை வருவோம் எனவும் டோனி தெரிவித்துள்ளார்.
புதிய அணிகள்...
ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தாவை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4-வது முறையாக ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்றியது. இந்த வெற்றிக்கு பிறகு சி.எஸ்.கே. கேப்டன் டோனி நிருபர்களிடம் கூறியதாவது:- நான் ஏற்கனவே உங்களிடம் தெரிவித்து விட் டேன். அடுத்த ஆண்டு சீசனுக்கு இரு அணிகள் புதியதாக வருகின்றன. எனவே சி.எஸ்.கே. அணிக்கு எது சிறந்ததாக முடிகிறதோ அந்த முடிவை எடுப்போம். எந்த காரணத்தினாலும், நிர்வாகம் பாதிக்கப்படக் கூடாது.
வலிமையான வீரர்...
தக்க வைக்கப்படும் வீரர்களில் நான் இருப்பேனா என்று தெரியாது. வலிமையான வீரர்களை கொண்ட அணி இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அடுத்த 10 ஆண்டுகளுக்கு சிறப்பாக பங்களிப்பு செய்யக்கூடிய வலிமையான அணியை உருவாக்க வேண்டும். அடுத்த ஆண்டு ஐ.பி.எல். சீசனில் நான் விளையாடுவது என்பது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முடிவில் இருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எது சிறந்ததோ அந்த முடிவை எடுப்போம். அணி நிர்வாகம் பாதிக்கப்படக்கூடாது.
தகுதியானவர்கள்...
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள் இந்த தொடரில் சிறப்பாக விளையாடினார்கள். அதே நேரத்தில் கோப்பையை வெல்ல நாங்கள் தகுதியானவர்கள். நாங்கள் வீரர்களை மாற்றி அமைத்தோம். சில போட்டிகளின் வெற்றிக்கு பின் மேட்ச் வின்னர்கள் கிடைத்தார்கள். ஒவ்வொரு இறுதிப்போட்டியும் சிறப்பானது. புள்ளி விவரங்களை பார்த்தால் நாங்கள் இறுதிப் போட்டியில் பலமுறை கோட்டையை விட்டுள்ளோம். அதற்காக நாங்கள் அதிகம் கவனம் செலுத்தவில்லை. பயிற்சியின்போது என்ன பேசுகிறோமோ அதுவே எங்களின் மீட்டிங்காக இருந்தது.
ரசிகர்களுக்கு நன்றி...
எங்களின் பயிற்சிகள் சிறப்பாகவே இருந்துள்ளன. நாங்கள் எங்கு விளையாடினாலும் ரசிகர்கள் ஆதரவாக இருந்தார்கள். அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். தென் ஆப்பிரிக்காவில் விளையாடியபோதும் சி.எஸ்.கே. ரசிகர்கள் திரண்டுவந்து ஆதரவு தெரிவித்தார்கள். அனைவருக்கும் நன்றி. நாங்கள் துபாயில் விளையாடினாலும், சென்னையில் விளையாடியதுபோல் உணர்கிறோம். சென்னை ரசிகர்களுக்காக விரைவில் சென்னை வருவோம் என்று நம்புகிறேன். இவ்வாறு டோனி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


