Idhayam Matrimony

தாதா சாகேப் பால்கே விருது கிடைப்பது மிகவும் மகிழ்ச்சி –ரஜினிகாந்த் பேட்டி

ஞாயிற்றுக்கிழமை, 24 அக்டோபர் 2021      சினிமா
Image Unavailable

Source: provided

தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா டெல்லியில் இன்று நடைபெற உள்ளது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுகிறது. அந்த விருதை பெருவதற்காக நடிகா் ரஜினிகாந்த் நேற்று காலை சென்னையிலிருந்து டெல்லி புறப்பட்டு சென்றார். புறப்படும் போது அவர் வீடு அமைந்துள்ள சென்னை போயஸ் கார்டன் இல்லத்திற்கு வெளியே நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

அப்போது, தாதா சாகேப் பால்கே விருது கிடைப்பது மிகவும் மகிழ்ச்சி என்றார். இந்த விருது கிடைக்கும் என நான் எதிர்பார்க்கவே இல்லை. இந்த நேரத்தில் கே பாலச்சந்தர் சார் இல்லாதது மிகவும் வருத்தத்தை கொடுக்கிறது என்று உருக்கமாக கூறினார். இதனிடையே, அறிக்கை ஒன்றை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் எனக்கு இரண்டு முக்கியமான நிகழ்வுகள் நடைபெற இருக்கிறது. ஒன்று மக்களின் அன்பினாலும் ஆதரவினாலும் திரையுலகின் உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருதை மத்திய அரசு எனக்கு வழங்க உள்ளது.

இரண்டாவது என்னுடைய மகள் சௌந்தர்யா விசாகன் அவருடைய சொந்த முயற்சியில் மக்களுக்கு மிகவும் பயன்படக்கூடிய Hoote என்கிற app ஐ உருவாக்கி அதை அறிமுகப்படுத்த உள்ளார். அதில் மக்கள் தாங்கள் மற்றவர்களுக்கு எழுத்து மூலம் தெரிவிக்க விரும்பும் கருத்துக்களையும் விஷயங்களையும் இனி அவர்களது குரலிலேயே எந்த மொழியிலும் hoote app மூலமாக பதிவிடலாம். இந்த வரவேற்கத்தக்க புதிய முயற்சிக்கான hoote app ஐ என் குரலில் பதிவிட்டு துவங்க உள்ளேன்.  இவ்வாறு அந்த அறிக்கையில்  ரஜினிகாந்த் கூறி இருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து