Idhayam Matrimony

லக்கிம்பூர் வழக்கில் வெறும் 23 பேர்தான் நேரடி சாட்சிகளா? - உ.பி. அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி

செவ்வாய்க்கிழமை, 26 அக்டோபர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : லக்கிம்பூர் வழக்கில் வெறும் 23 பேர்தான் நேரடி சாட்சிகளா என்று உ.பி. அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தின் லக்கிம்பூர் கெரி மாவட்டத்தின் லக்கிம்பூரில் கடந்த  மாதம் 10-ம் தேதி பா.ஜ.க.வினர் சென்ற கார் விவசாயிகள் மீது மோதியது. இதனை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் 4 விவசாயிகள், பத்திரிக்கையாளர்  ஒருவர் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்  விசாரித்து வருகிறது. சுப்ரீம் கோர்ட்  அதிருப்தி தெரிவித்திருந்த நிலையில், அக்டோபர் 11ம் தேதி ஆஷிஷ் மிஸ்ரா கைது செய்யபட்டார்.

இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி என்வி ரமணா, நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் ஹிமா கோலி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, உத்தரப்பிரதேச அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே வழக்கின் நிலை குறித்த 2வது அறிக்கையை தாக்கல் செய்தார். 

அப்போது, நூற்றுக்கணக்கான விவசாயிகள் பேரணியில் பங்கேற்றிருந்தபோது வெறும் 23 பேர்தான் நேரில் கண்ட சாட்சிகளா என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த சம்பவத்தின்போது ஆயிரக்கணக்கான மக்கள் இருந்துள்ளனர் . அவர்கள் அனைவரும் உள்ளூர் மக்கள், சம்பவத்திற்கு பின்னர் நீதி வேண்டும் என்று அவர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். எனவே, அவர்களை அடையாளம் காண்பது கடினமல்ல.

விசாரணை குழு மேலும் அதிகமான நேரடி சாட்சிகளை கண்டறிய வேண்டும் என்று தெரிவித்தது. வழக்கின் வீடியோ ஆதாரங்களை தடயவியல் ஆய்வகங்கள் விரைவாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும் நீதிமன்ற அமர்வு வாய்மொழியாக கூறியது. சாட்சிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்த நீதிபதிகள் வழக்கு விசாரணையை நவம்பர் 8-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து