முக்கிய செய்திகள்

உலக குத்துச்சண்டை: இந்திய வீரர்கள் வெற்றி

Wold 2021 10 26

Source: provided

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் முதல் சுற்றில் இந்திய வீரர்கள் வெற்றி பெற்றனர்.  உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி செர்பியா தலைநகர் பெல்கிரேடில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 105 நாடுகளை சேர்ந்த 600-க்கும் மேற்பட்டகுத்துச்சண்டை வீரர்கள் களமிறங்குகின்றனர். வீரர்கள் காலிறுதி நிலைக்குச் செல்ல சில பிரிவுகளில் குறைந்தது மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றாக வேண்டும்.

இதில் இந்திய குத்துச்சண்டை வீரர் ஆகாஷ் சங்வான் (67 கிலோ)  தனது தொடக்க ஆட்டத்தில் துருக்கியின் பர்கான் அடெமை 5-0 என்ற கணக்கில் வென்று 2-வது சுற்றுக்குள் நுழைந்தார்.  மற்றொரு ஆட்டத்தில் அறிமுக வீரர் ரோஹித் மோர் (57 கிலோ) தொடக்கச் சுற்றில் ஈக்வடாரின் ஜீன் கெய்செடோவை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி இந்தியாவுக்கு அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். 

___________

முகமது ஷமியை ட்ரோல் செய்த பதிவுகளை நீக்கியது ஃபேஸ்புக்

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமியை இழிவுபடுத்தி எழுதப்பட்ட பதிவுகள் நீக்கப்பட்டுள்ளதாக ஃபேஸ்புக் சமூகவலைத்தளம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி தோல்வியடைந்ததற்கு முகமது ஷமியின் மோசமான பந்துவீச்சே காரணம் எனச் சமூகவலைத்தளங்களில் ரசிகர்கள் பலரும் அவரை இழிவுபடுத்தியுள்ளார்கள். இந்தியாவை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியதின் மூலம் உலகக் கோப்பை வரலாற்றில் இந்தியாவுக்கு எதிராகத் தனது முதல் வெற்றியைப் பெற்றது பாகிஸ்தான். 

இந்திய அணியின் மோசமான தோல்விக்கு வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியே முக்கியக் காரணம் எனச் சமூகவலைத்தளங்களில் அவரை இழிவுபடுத்தி பதிவுகள் எழுதப்பட்டுள்ளன. ஷமியின் இன்ஸ்டகிராம் பக்கத்தில் நூற்றுக்கணக்கான பேர் ஷமியைத் துரோகியாகச் சித்தரித்து மத ரீதியிலான பதிவுகள் எழுதியுள்ளார்கள். இந்திய அணிக்குத் துரோகம் செய்ததால் அவரை அணியிலிருந்து நீக்கவேண்டும் என்றும் எழுதி தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள். இந்நிலையில் ஃபேஸ்புக் சமூகவலைத்தளத்தில் ஷமிக்கு எதிராகவும் அவரை இழிவுபடுத்தியும் எழுதப்பட்ட பதிவுகள் நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

___________

சேவாக், கவுதம் கம்பீருக்கு பாகிஸ்தான் வீரர் அட்வைஸ்

பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடுபவர்கள், பட்டாசு வெடித்து கொண்டாடுபவர்கள் இந்தியர்கள் அல்ல, நம் அணியுடன் கரம்கோர்ப்போம் என்று கம்பீர் தெரிவிக்க, சேவாக், இப்போது பட்டாசு வெடிக்க முடிகிறது என்றால் தீபாவளிக்கு ஏன் வெடிக்கக் கூடாது என்று கேட்டு ட்வீட் செய்திருந்தார். இந்நிலையில் தன் யூடியூப் சேனலில் சல்மான் பட் கூறும்போது, “சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் இப்படியா ரியாக்ட் செய்வது? கம்பீர், சேவாக் இருவரும் நீண்ட காலம் ஆடியவர்கள், மிகவும் பிரபலமானவர்கள் கூட. இவர்களைப் போன்றவர்கள்தான் மக்களுக்கு எடுத்துச் சொல்லை புரிந்து கொள்ள வைக்க வேண்டும். 

இவர்களே இப்படி கருத்துக் கூறினால் இவர்களைச் சுற்றியிருப்பவர்களும் இவர்கள் கூறுவதுதான் சரி என்று நினைப்பார்கள். கிரிக்கெட் வீரர்கள் தாங்கள் என்ன எழுதுகிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இவர்கள் கூறுவதை வேதவாக்காக எடுத்துக் கொள்கின்றனர். எனவே இவர்கள்தான் சரியான கருத்தைச் சொல்ல வேண்டும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து