Idhayam Matrimony

ஆப்கனில் மருத்துவமனை அருகே இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதல்

செவ்வாய்க்கிழமை, 2 நவம்பர் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

காபூல் : ஆப்கானிஸ்தானில் மருத்துவமனை அருகே நேற்று  துப்பாக்கிச்சூடு மற்றும் இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் கடந்த ஆகஸ்ட் மாதம் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். தற்போது, அந்நாட்டில் தலீபான்களின் ஆட்சி நடைபெற்று வருகிறது.  இதற்கிடையில், தலீபான்களின் ஆட்சிக்கு எதிராக ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு அவ்வப்போது தாக்குதல்களை அரங்கேற்றி வருகிறது. மேலும், சில கிளர்ச்சியாளர்கள் குழுக்களும் தலீபான்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அந்நாட்டின் தலைநகர் காபூலில் உள்ள ராணுவ மருத்துவமனை அருகே நேற்று இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதல் நடைபெற்றுள்ளது. நேற்று மதியம் 2 மணியளவில் அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் மருத்துவமனை அருகே வெடித்துள்ளன.  இந்த குண்டுவெடிப்பை தொடர்ந்து அப்பகுதியில் துப்பாக்கிச்சூடு தாக்குதலும் நடைபெற்றது.

இந்த தாக்குதலில் உயிரிழப்புகள் ஏதேனும் ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்து தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. இதற்கிடையில், தலீபான்களின் பாதுகாப்பு படையினரை குறிவைத்து ஐ.எஸ். அமைப்பின் ஹரொசன் பிரிவினர் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 2 days ago
View all comments

வாசகர் கருத்து