எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான நைஜர் என்ற நாட்டில் கிராமத்திற்குள் புகுந்து பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒரு நகரின் மேயர் உள்பட அப்பாவி பொதுமக்கள் 70 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
நைஜீரியா பாலி, புர்கினோ ஆகிய நாடுகளின் எல்லைகளை பகிர்ந்து கொள்ளும் நைஜர் நாடு உலகின் மிகவும் வறுமை மிக்க நாடாக ஐ.நா.வால் அறிவிக்கப்பட்ட ஒன்றாகும். இங்கு அரசின் பாதுகாப்புப்படையை எதிர்த்து ஐ.எஸ். பயங்கரவாதிகள் அல்கொய்தா ஆதரவு பெற்ற தீவிரவாதிகள் பல ஆண்டுகளாக சண்டையிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை எல்லை அருகே உள்ள அடாப்தாப் என்ற கிராமத்தில் துப்பாக்கி ஏந்திய பயங்கரவாதிகள் புகுந்து சுட தொடங்கினர். இதில் தில்லாபெரி நகர மேயர் உள்பட 70 பேர் கொல்லப்பட்டனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. கடந்த மார்ச் மாதம் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 137 பேர் உயிரிழந்தனர். ஆகஸ்டில் 16 பேர் கொல்லப்பட்டனர். இதே தில்லாபெரி பகுதியில் கடந்த ஆண்டு ஜனவரியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 90 பேர் கொல்லப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


