Idhayam Matrimony

ஆவடி அருகே சம்பவம்: வாலிபரை தாக்கி கூகுள் பே மூலம் பணத்தை பறித்த கொள்ளையர்கள்

செவ்வாய்க்கிழமை, 16 நவம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

ஆவடி அருகே லிப்ட் கேட்பது போல் நடித்து வாலிபரை தாக்கி கூகுள் பே மூலம் பணத்தை பறித்த கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

குன்றத்தூரை சேர்ந்தவர் அஜித்குமார். இவர் ஆவடியை அடுத்த சோலைசேரி பகுதியில் இருந்து ஆவடி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மர்ம வாலிபர் ஒருவர் வண்டியை வழிமறித்து லிப்ட் கேட்டார். அந்த நேரத்தில் மேலும் 2 வாலிபர்கள் அங்கு வந்து அஜித்குமாரை சரமாரியாக தாக்கி அவர் அணிந்திருந்த ஒரு பவுன் மதிப்புள்ள மோதிரம், தங்க சங்கிலியை பறித்தனர்.

மேலும் அஜித்குமாரின் செல்போனை பறித்து அவரது வங்கி கணக்கில் இருந்து கூகுள் பே மூலம் ரூ. 13 ஆயிரத்தை தங்களது வங்கி கணக்குக்கு அனுப்பினர். பின்னர் அஜித்குமாரை முட்புதரில் தள்ளிவிட்டு செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிளையும் பறித்து மர்ம நபர்கள் தப்பி சென்று விட்டனர். 

 

இதுகுறித்து அஜித்குமார் ஆவடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொள்ளையர்கள் பணத்தை அனுப்பிய வங்கி கணக்கு விபரத்தை வைத்து விசாரணை நடந்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து