எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : பொறியியல், கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக் உள்ளிட்ட அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகள் நேரடியாக நடத்தப்படும் என தமிழக உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று உச்சத்தில் இருந்தது. இதனால் பள்ளிகள் முதல் கல்லூரிகள் வரையிலான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. கல்லூரிகளில் இறுதியாண்டின் கடைசி தேர்வு மட்டும் நடத்தப்பட்டது. 2-வது அலை காரணமாக ஆன்-லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு, ஆன்-லைன் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டன.
தற்போது கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் வந்துள்ளது. இதனால் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. கடந்த 1-ம் தேதியில் இருந்து ஒன்றாம் வகுப்புக்கான பள்ளிகளில் இருந்து அனைத்து வகுப்புக்கான பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளன. கல்லூரிகளிலும் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
சில தினங்களுக்கு முன் அண்ணா பல்கலைக்கழகம், நேரடி முறையில செமஸ்டர் தேர்வு நடத்தப்படும் என அறிவித்தது. தமிழகத்தின் மற்ற அனைத்து கல்லூரிகளிலும் இதே முறையில்தான் தேர்வு நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் செமஸ்டர் தேர்வுகளை நேரடியாக நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆன்லைன் மூலம் கல்லூரி வகுப்புகளை நடத்திவிட்டு செமஸ்டர் தேர்வுகளை நேரடியாக நடத்தக் கூடாது என்றும், ஆன்லைனிலேயே நடத்த வேண்டும் எனக் கோரியும் மதுரை ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், அனைத்து வகை கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகள் நேரடியாக மட்டுமே நடைபெறும் என்று உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. பொறியியல், கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக் என அனைத்து வகை கல்லூரிகளிலும் தேர்வுகள் நேரடியாகவே நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


