முக்கிய செய்திகள்

பொங்கல் தொகுப்போடு பரிசு பணமும் வழங்கப்பட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

புதன்கிழமை, 17 நவம்பர் 2021      தமிழகம்
Edappadi 2020 11-16

Source: provided

சென்னை : தி.மு.க. அரசு அறிவித்த பொங்கல் பரிசு தொகுப்பில் பணம் இடம்பெறவில்லை என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வேதனையோடு கூறியுள்ளார்.

தமிழகத்தில் 2022-ம் ஆண்டு வர உள்ள பொங்கல் பண்டிகையையொட்டி, அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் முகாம்களில் வசிப்பவர்களுக்கும்  கரும்புடன் 20 பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் எனத் தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. 

இந்தநிலையில் தி.மு.க. அரசு அறிவித்த பொங்கல் பரிசு தொகுப்பில் பணம் இடம்பெறவில்லை என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

பொங்கல் விழாவினை மக்கள் சிறப்பாக கொண்டாடும் நோக்கோடு கடந்த அம்மா அரசின் ஆட்சியில் பொங்கலுக்கு தேவையான அனைத்து பொருட்களும் அடங்கிய தொகுப்போடு பொங்கல் பரிசு பணமும்,முழு கரும்பும் வழங்கி வந்தோம். ஆனால் தி.மு.க. அரசு முதலில் அறிவித்த பொங்கல் பரிசு தொகுப்பில் பணம், கரும்பை காணவில்லை.

தற்போது அறிவித்திருக்கும் பொங்கல் தொகுப்பில் கரும்பு  சேர்க்கப்பட்டு,தொகுப்போடு வழங்கப்பட்டு வந்த பொங்கல் பரிசு பணத்தை காணவில்லை,

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்போடு பரிசு பணமும் வழங்கப்பட வேண்டும் என இந்த தி.மு.க. அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து