முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் உள்ள கோவில்களின் தணிக்கை அறிக்கை 2 வாரங்களில் தாக்கல் செய்யப்படும்: சென்னை ஐகோர்ட்டில் அரசு உறுதி

வியாழக்கிழமை, 18 நவம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களின் தணிக்கை அறிக்கை இரு வாரங்களில் தாக்கல் செய்யப்படும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள கோவில்களின் கணக்கு வழக்குகளை மத்திய கணக்கு தணிக்கை குழு மூலம் தணிக்கை செய்ய உத்தரவிடக் கோரி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், அனைத்து கோவில்களின் தணிக்கை அறிக்கைகளும் இரு வாரங்களில் தாக்கல் செய்யப்படும் எனத் தெரிவித்தார். இதை பதிவு செய்த நீதிபதிகள், விசாரணையை இரு வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.

இதேபோல, கோவில் அறங்காவலர்கள் நியமனம் தொடர்பாக ரங்கராஜன் தாக்கல் செய்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, அறங்காவலர்களை நியமனம் செய்வதற்கான குழு உறுப்பினர்களை தேர்வு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளதாகவும், விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி நேற்று முன்தினத்துடன் முடிந்து விட்டதாகவும் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம் தெரிவித்தார். மேலும், குழுக்கள் அமைக்கப்பட்டு, அறங்காவலர்கள் நியமிக்கப்படுவார் எனவும் அவர் தெரிவித்தார். இதை ஏற்று வழக்கின் விசாரணையை இரு வாரங்களுக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், இதுசம்பந்தமாக இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து