முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிறுவனங்களின் மோசடிகளை விசாரிக்க புதிய தணிக்கை பிரிவுகள் தொடக்கம்: முதல்வர் ஸ்டாலின் பேச்சு

வெள்ளிக்கிழமை, 19 நவம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

பொருளாதாரக் குற்றப் பிரிவிலும், ஊழல் தடுப்புப் பிரிவிலும், நிறுவனங்களின் மோசடிகளை விசாரிக்க தமிழக அரசு புதிய தணிக்கைப் பிரிவுகளை இப்போது தொடங்கியுள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். 

கோயம்புத்தூரில்  நேற்று நடைபெற்ற இந்தியப் பட்டயக் கணக்கறிஞர்கள் கழகத்தின் 53-வது மண்டலக் கருத்தரங்கில் முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக பேசியதாவது, 

தென்மண்டல கவுன்சிலின் 70-வது ஆண்டில் நடைபெறும் உங்களது 53-வது மண்டலக் கருத்தரங்கில் ஒரு அங்கமாக கலந்து கொள்வது பல வகைகளிலும் எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. பட்டயக் கணக்கறிஞர்களான உங்கள் மீது எப்போதுமே எனக்கு பெருமதிப்பு உண்டு.  பட்டயக் கணக்கறிஞர்களான உங்களின் அறிவுத்திறன் நாட்டை ஆள்பவர்களுக்கும் தொழிலதிபர்களுக்கும் சமூகத்தின் இதர பிரிவினருக்கும் பல வழிகளிலும் துணையாக உள்ளது. 

நிதித்துறை, கார்ப்பரேட் நிர்வாகம், கணக்குத் தணிக்கை போன்ற செயல்பாடுகளில் அரசுக்கு உதவுவதோடு உங்கள் பணி நின்று விடுவதில்லை. அவை சார்ந்த சட்டங்களை இயற்றுவதிலும், வேளாண் வளர்ச்சி செயல்பாடுகளிலும், நாட்டின் வளர்ச்சிக்கு நீங்கள் பெரும் பங்காற்றி வருகிறீர்கள். ஆகையால் உங்களை நாட்டு வளர்ச்சிக்கான பங்களிப்பாளர்கள் என்று அழைப்பதுதான் சரியாக இருக்கும். உலக அளவில் நம் நாடு முன்னணியில் இருக்க வேண்டும் என்றால் அதற்கு வலுவான நிதிக் கட்டமைப்புகளும் ஒழுங்குமுறைகளும் தேவை. அதற்கான யோசனைகளை வழங்குவதில் உங்கள் திறமை மீது நாட்டில் உள்ள அனைவருக்கும் பெரும் நம்பிக்கை உள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தை வளர்த்தெடுப்பதிலும் வடிவமைப்பதிலும் பட்டயக் கணக்கறிஞர்களான நீங்கள் முக்கியப் பங்காற்றுகிறீர்கள் என்பதை என்னால் ஐயமின்றிக் கூற முடியும். இந்த நற்பெயர் எப்போதும் நிலைத்துநிற்கும் வகையிலும் அரசாங்கத்தின் கரங்களை வலுப்படுத்தும் வகையிலும் உங்கள் பணிகள் அமைய வேண்டும்.

அரசின் உயர்பதவிகளில் உங்கள் துறையைச் சேர்ந்த பலர் உள்ளனர். அரசு அமைக்கும் முக்கியக் குழுக்களிலும் இடம் பெற்று தகுந்த ஆலோசனைகளை வழங்குகின்றனர். இந்த தருணத்தில் உங்களுக்கு ஒரு முக்கியச் செய்தியை சொல்ல விரும்புகிறேன். பொருளாதாரக் குற்றப் பிரிவிலும், ஊழல் தடுப்புப் பிரிவிலும், நிறுவனங்களின் மோசடிகளை விசாரிக்க தமிழக அரசு புதிய தணிக்கைப் பிரிவுகளை இப்போது தொடங்கியுள்ளது என்பதையும் இந்நிகழ்வில் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

நிதிநிலையைச் சீராக்குவதிலும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கிய நடவடிக்கைகளிலும் தமிழக அரசுக்கு தேவையான பரிந்துரைகளை நீங்கள் தெரிவித்தால் உடனடியாக அவற்றில் கவனம் செலுத்தி, நடைமுறைப்படுத்துவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம்.  இவ்வாறு முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து