எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
திருச்செந்தூர் : மழை நீர் முழுமையாக வடிந்ததை அடுத்து திருச்செந்தூர் முருகன் கோவிலில் நேற்று வழக்கம்போல் பக்தர்கள் மீண்டும் சுவாமி தரிசனம் செய்தனர்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று இதுவரை இல்லாத அளவில் கனமழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக காயல்பட்டினம், திருச்செந்தூர், ஆறுமுகநேரி, தூத்துக்குடி நகர பகுதிகளில் இடைவிடாது பெய்த கனமழையால் பல்வேறு இடங்களிலும் சாலைகளில் வெள்ளம் தேங்கியது.
திருச்செந்தூர் சுற்று வட்டார பகுதிகளில் இடி-மின்னலுடன் பெய்த கனமழை காரணமாக சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குள் மழைநீர் புகுந்தது. மேலும் கோவில் கிழக்கு பகுதியில் கிரிபிரகாரத்தில் முழங்கால் அளவுக்கு மழைநீர் தேங்கியது. பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் கோவிலில் தேங்கிய மழைநீர் அப்புறப்படுத்தப்பட்டது. ஆனால் சுவாமி மூலவர் இருக்கும் மகாமண்டபத்திற்குள் மழைநீர் செல்லவில்லை. அதேநேரம் நாழிக்கிணறு கார்நிறுத்தும் இடத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆனால் மழையை பொருட்படுத்தாமல் பக்தர்கள் காத்துநின்று தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் பணியாளர்கள் மின்மோட்டார் மூலமும், பொக்லைன் எந்திரம் மூலமும் வெள்ளநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனால் சிலமணி நேரங்களில் வெள்ளம் வடிய தொடங்கியது. குறிப்பாக கோவிலை சுற்றி தேங்கிய மழைவெள்ளநீர் வெளியேற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது. இதன் காரணமாக சுப்பிரமணிய சுவாமி கோவிலை சுற்றி தேங்கிய வெள்ளம் சிறிது நேரத்தில் முழுமையாக வடிந்தது.
இதனால் நேற்று காலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் வழக்கம் போல் தரிசனம் செய்தனர். மேலும் திருச்செந்தூர் நகரப்பகுதிகளிலும் தேங்கி நின்ற மழைநீர் முழுமையாக வடிந்ததால் நேற்று திருச்செந்தூர் இயல்பு நிலைக்கு திரும்பியது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


