Idhayam Matrimony

புதிதாக 8,774 பேருக்கு கொரோனா: மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 28 நவம்பர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8,774 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் மீண்டும் கொரோனா தினசரி பாதிப்பு 9 ஆயிரத்துக்கு கீழே வந்துள்ளது. இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு ஏறுமுகம் கண்டு வந்தது. அந்த நிலை நேற்று முன்தினம் மாறியது. நேற்று முன்தினம் காலை 8 மணியுடன் முடிந்த ஒரு நாளில் தினசரி பாதிப்பு என்பது மீண்டும் 9 ஆயிரத்துக்கு கீழே வந்தது. 

இந்நிலையில் இந்தியாவில் நேற்று மேலும் 8,774 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. (கேரளாவில் மட்டுமே 4,741 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது). இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், 

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8 ஆயிரத்து 774 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. அதே போல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 621 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,68,554 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 9,481 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதன்மூலம் குணமடைவோர் விகிதம் 98.34 சதவீதமாக உள்ளது.  மேலும் கடந்த 543 நாட்களில் குறைந்த அளவாக கொரோனா தொற்றுக்கு தற்போது 1,05,691 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதனிடையே இந்தியாவில் கொரோனா பாதிப்பை கண்டறிய நேற்று முன்தினம் ஒரே நாளில் 10,91,236 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 63,93,39,125 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 2 days ago
View all comments

வாசகர் கருத்து