முக்கிய செய்திகள்

நியூயார்க்கில் மேலும் 5 பேருக்கு ஒமைக்ரான்

வெள்ளிக்கிழமை, 3 டிசம்பர் 2021      உலகம்
New-York-Omigron 2021 12 03

தென் ஆப்பிரிக்காவில் முதல்முதலாக பரவிய ஒமைக்ரான் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. நியூயார்க்கில் தற்போது மேலும் 5 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மினாசோட்டாவை சேர்ந்த ஒருவர் கடந்த மாதம் நடந்த ஒரு மாநாட்டில் கலந்து கொண்டார். அவருக்கு இந்த நோய் தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்களை பரிசோதனை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.  இதே போல் தென் ஆப்பிரிக்காவுக்கு சென்று திரும்பிய கொலராடோ பெண் ஒருவரும் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார்.

தடுப்பூசி போடப்பட்ட கலிபோர்னியாவை சேர்ந்த பயணி ஒருவருக்கு லேசான அறிகுறி உள்ளது. தற்போது பாதிக்கப்பட்ட 5 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்துவதற்கான பணி நடந்து வருகிறது. அமெரிக்காவில் தற்போது 3 மாகாணங்களில் இந்த வைரஸ் தொற்று பரவியுள்ளதால் அந்நாட்டு மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து