எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்கு இயந்திர கோளாறு காரணமா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
முப்படைகளின் தலைமை தளபதி விபின் ராவத் பயணித்த விமானப் படை ஹெலிகாப்டர், நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் நஞ்சப்ப சத்திரம் என்ற இடத்தில் நேற்று விழுந்து விபத்துக்குள்ளானது. விபத்து நடந்தது எப்படி, விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டரின் வகை குறித்த பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.
விபத்தில் சிக்கிய விமானப் படை ஹெலிகாப்டரில் முப்படைத் தலைமை தளபதி விபின் ராவத், அவரது மனைவி மற்றும் உயர் அதிகாரிகள் பயணித்ததாக முதலில் உறுதி செய்யப்பட்டன. இந்த ஹெலிகாப்டர், எப்படி விபத்துக்குள்ளானது என்பது குறித்து நேரில் பார்த்தவர்கள் அளிக்கும் தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வருகிறது. முதலில் கிடைத்த தகவலின்படி, பனிமூட்டம் காரணமாக தாழ்வாக பறந்த ஹெலிகாப்டர், மரத்தில் மோதி நிலைதடுமாறி கீழே தலைக்குப்புற விழுந்ததாகவும், பிறகு அதில் தீப்பற்றியகக் கூறப்பட்டது.
இதற்கிடையே, தீப்பிடித்து எரிந்தபடி ஹெலிகாப்டர் விழுந்தை நேரில் பார்த்ததாகவும் சிலர் கூறியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. குன்னூர் அருகே முப்படைகளின் தலைமை தளபதி விபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய நிகழ்வில் அந்த ஹெலிகாப்டர் தீப்பிடித்து எரிந்தபடியே கீழே விழுந்ததாக உள்ளூர்வாசிகள் தற்போது தெரிவித்துள்ளனர். வானில் தீப்பிழம்புடன் எரிந்தபடி ஹெலிகாப்டர் வானத்திலிருந்து மரத்தின் மீது விழுந்ததாக உள்ளூர்வாசிகள் சிலர் தெரிவித்துள்ளனர். இதனால் ஹெலிகாப்டர் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக விழுந்திருக்கலாம் என்ற சந்தேகமும் தற்போது எழுந்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


