எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
குன்னூர் : தான் படித்த கல்லூரியில் நடக்க கூடிய கருத்தரங்கில் பங்கேற்று, பயிற்சி ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடுவதற்காக வந்தபோது தான் பிபின் ராவத் விபத்தில் சிக்கி பலியானார்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் ராணுவ அதிகாரிகள் பயிற்சி கல்லூரியில், 40 நாடுகளை சேர்ந்த 430 பேர் ராணுவ பயிற்சி பெற்று, ராணுவ உயரிய பதவிகளை வகித்து வருகின்றனர். குன்னூர் நஞ்சப்பாசத்திரம் பகுதியில், நேற்று நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் பலியான முப்படை தளபதி பிபின் ராவத் பல்வேறு உயரிய பதவிகளை வகித்தார். அதற்கான பெருமை இந்த கல்லூரிக்கு உள்ளது. அவரும் இந்த கல்லூரியில் பயிற்சி பெற்ற மாணவர் ஆவார்.
இந்த நிலையில், தான் படித்த கல்லூரியில் நடக்க கூடிய கருத்தரங்கில் பங்கேற்று, பயிற்சி ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடுவதற்காக வந்தபோது தான் அவர் விபத்தில் சிக்கி பலியானார். இந்த சம்பவம் ராணுவ பயிற்சி கல்லூரி மாணவர்கள், உயர் அதிகாரிகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குன்னூரில் பயின்று நம் ராணுவ படைக்கு தலைமை வகித்து, பின்னர் முப்படைகளின் தளபதியாக தலைநிமிர்ந்த அந்த சிங்கம், தன் ராணுவ தந்திரங்கள் பயின்ற மண்ணிலேயே கம்பீரமாக தலை சாய்ந்தது, பெரும் வரலாற்று பதிவாகி உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


