முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒமைக்ரான் வைரஸ் மனிதர்களின் நுரையீரலை உடனே பாதிக்காது : ஆய்வில் புதிய தகவல்

வெள்ளிக்கிழமை, 17 டிசம்பர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : ஒமைக்ரான் வைரஸ், உண்மையான சார்ஸ் கோவிட்டை விடவும், டெல்டா வைரஸை விடவும் வேகமாகப் பரவும், பன்மடங்கு பிரதியெடுத்துப் பெருகும் என்றாலும் மனிதர்களுக்கு பாதிப்பை உடனடியாக ஏற்படுத்தாது. குறிப்பாக நுரையீரலின் கீழ்ப்பகுதியை உடனடியாக பாதிக்காது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆனால், டெல்டா வைரஸ் தொற்று ஏற்பட்டால் அடுத்த சில நாட்களில் மனிதர்களின் நுரையீரலை மிக மோசமாக பாதித்துவிடும். அந்த அளவோடு ஒப்பிடும்போது, 10 மடங்கு குறைவான பாதிப்பையே ஒமைக்ரான் ஏற்படுத்தும் எனத் தெரியவந்துள்ளது. ஹாங்காங் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த எல்கேஎஸ் மருந்துத்துறையைச் சேர்ந்த ஆய்வாளர்கள் ஒமைக்ரான் வைரஸ் குறித்தும், தீவிரத் தன்மை குறித்தும் ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

மனிதர்களின் இரு நுரையீரல்களும் சுவாசக் குழாயின் முனையில் ஒவ்வொரு நுரையீரலிலும் ஒரு 'y' போலப் பிரிகின்றன. முந்தைய கொரோனா வைரஸ் அதாவது டெல்டா வைரஸுடன் ஒப்பிடும்போது ஒமைக்ரான் வைரஸ் நுரையீரலுக்குள் ஆழமாக ஏன் முன்னேறுவதில்லை என்பது குறித்துக் கட்டுரையில் விளக்கவில்லை. இன்னும் அதுகுறித்து மதிப்பாய்வு செய்யப்பட்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனிதர்களின் நுரையீரலில் இருந்து நுரையீரல் திசுக்களைப் பிரித்தெடுத்து அதில் ஒமைக்ரான் உருமாற்றத்தை மட்டும் ஆய்வாளர்கள் பிரித்தெடுத்துள்னர். டெல்டா வைரஸிலிருந்து, ஒமைக்ரான் வைரஸ் எவ்வாறு மாறுபட்டது, எந்த அளவு பாதிப்பைத் தருகிறது, தரவில்லை என்பது குறித்து ஆராய்ந்துள்ளனர்.

அதில் டெல்டா வைரஸை விடவும், உண்மையான சார்ஸ் கோவிட்டை விட பிரதி எடுப்பதில் 70 மடங்கு வேகமாக ஒமைக்ரான் செயல்படுகிறது. ஆனால், நுரையீரல் திசுக்களைப் பிரதியெடுப்பதில் சார்ஸ் கோவிட்டை விட 10 மடங்கு குறைவாகவே இருக்கிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் காரணமாகவே நுரையீரலை ஒமைக்ரான் உடனடியாக பாதிக்காது என ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

இந்தியாவில் இதுவரை 73 பேர் ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், தென் ஆப்பிரிக்காவில் இருந்துவரும் தகவலின்படி, ஒமைக்ரான் தொற்று வேகமாக அதிகரிக்கும் எனத் தெரியவந்துள்ளது. சமீபத்திய ஆய்வுகளின்படி, ஒமைக்ரானுக்கு எதிராக உற்பத்தி செய்யப்படும் நோய் எதிர்ப்பு சக்தி முந்தைய வைரஸ் வகைகளைவிட 20-40 மடங்கு குறைவாக இருப்பதாகத் தெரிவிக்கின்றன. ஆனால், கொரோனாவால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள், தடுப்பூசி போடப்பட்டவர்களிடமும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து