எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தியாவில் உள்ள அனைத்து நகரங்களின் வளர்ச்சிக்கும் அனைவரும் பாடுபட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
உ.பி., மாநிலம் வாரணாசியில் மேயர்கள் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில், 120 நகர மேயர்கள் கலந்து கொண்டனர். வீடியோ கான்பரன்சிங் முறையில் நடந்த இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது:-
வரலாற்று சிறப்பு மிக்க நகரங்களின் வளர்ச்சிக்கு வாரணாசி முன்மாதிரியாக உள்ளது. இதில் இருந்து நாம் பாடம் கற்று கொள்ளலாம். உள்ளூர் மக்களின் திறன் மற்றும் பொருட்களை நாம் மதிக்க வேண்டும். வரலாறு, பாரம்பரியம் மற்றும் வளர்ச்சி ஆகியவை ஒன்றோடு ஒன்று கைகோர்த்து செல்ல வேண்டும். வளர்ச்சிக்கான கொள்கைகளுக்கு வாரணாசியில் வளர்ச்சித்திட்டங்கள் புதிய பாதையை ஏற்படுத்தி கொடுக்கும்.
அனைத்து நகரங்களும் வளர்ச்சிக்காக பாடுபட வேண்டும். தங்களது நகரங்கள் தூய்மையாக வைத்து கொள்வதற்கு அனைத்து மேயர்களும் முயற்சி செய்ய வேண்டும். தூய்மைபடுத்துவது போல், அழகுபடுத்துவதும் மிகவும் முக்கியம். தங்கள் நகரின் வளர்ச்சி மற்றும் சிறப்பான எதிர்காலத்திற்காக கிடைக்கும் எந்த ஒரு வாய்ப்பையும் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள மேயர்கள் தவற விட மாட்டார்கள் என நம்புகிறேன். காசியில் நடக்கும், இந்த நிகழ்ச்சியானது, இந்தியாவில் உள்ள அனைத்து நகரங்களும் வளர்ச்சி பெறுவதற்கு முக்கியமாக இருக்கும்.
இந்தியாவிற்கு இன்று புரட்சி தேவையில்லை. நமது பாரம்பரியமிக்க கட்டடங்களை இடிக்கவோ, புனரமைக்க வேண்டிய அவசியம் இல்லை. அவற்றிற்கு புத்துயிர் பெற செய்ய வேண்டும். தங்களது நகரத்தை தூய்மையான நகர பட்டியலில் முதலிடத்திற்கு கொண்டு வர முன்முயற்சி செய்ய வேண்டும். நமது தொழிலாளர்களையும், வியாபாரிகளையும் பாதுகாக்க வேண்டும். தெருவோர வியாபாரிகளுக்கும் டிஜிட்டல் பரிவர்த்தனை பயன் அளிக்கும். நமது நகரங்கள் பெரும்பாலானவை, பாரம்பரியம் மிகுந்தவை. அவர்களின் வளர்ச்சியும் பாரம்பரியத்தை சார்ந்து இருக்க வேண்டும். அந்த இடங்களில் இருந்து. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


