Idhayam Matrimony

பிரதமர் மோடிக்கு ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடிக்கு பஞ்சாப் அரசே பொறுப்பு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கண்டனம்

வெள்ளிக்கிழமை, 7 ஜனவரி 2022      அரசியல்
Image Unavailable

பிரதமர் மோடி பஞ்சாப் வருகையின்போது பாதுகாப்பு குளறுபடி கண்டிக்கத்தக்கது, முழு பொறுப்பையும் பஞ்சாப் அரசுதான் ஏற்க வேண்டும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கருத்து தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசு ஆட்சியமைத்துள்ளது. முதல்வராக ரங்கசாமி பொறுப்பேற்றது முதல் இதுவரை டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்திக்கவில்லை. இதுபற்றி முதல்வர் ரங்கசாமியிடம் கேட்டதற்கு, " நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தொற்று பரவல் குறைந்தவுடன் பிரதமர் மோடியை சந்திப்போம். பிரதமர் மோடியை சந்திக்க பயம் என்பது தவறான குற்றச்சாட்டு. பிரதமர் மோடி மிக மிக நெருங்கிய நண்பர். அவரை விரைவில் கண்டிப்பாக சந்திப்பேன்.

புதுவையில் தேசிய இளைஞர் விழா வரும் 12-ம் தேதி முதல் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இதை பிரதமர் மோடி புதுச்சேரியில் தொடங்கி வைப்பதாக இருந்தது. கொரோனாவால் காணொலியில் இவ்விழாவை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி காணொலியில் விழாவை தொடங்கி வைப்பார். அந்தந்த மாநிலங்களில் இருந்தபடியே இளைஞர்கள் இந்த விழாவை கொண்டாடுவர்.

பஞ்சாப் மாநிலத்தில் பிரதமருக்கு பாதுகாப்பு வழங்கப்படாமல் குளறுபடி ஏற்பட்டது கண்டிக்கத்தக்கது. இதற்கு முழு பொறுப்பையும் பஞ்சாப் அரசுதான் ஏற்க வேண்டும். ஒரு மாநிலத்துக்கு பிரதமர் வரும்போது அதன் முழு பாதுகாப்பையும் மாநில அரசு ஏற்பதுதான் கடமை. பிரதமருக்கு சங்கடத்தை உருவாக்கியது சரியானதல்ல-கண்டிக்கத்தக்கது" என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 7 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 7 hours ago
View all comments

வாசகர் கருத்து