முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 56 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள் : மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

வெள்ளிக்கிழமை, 7 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : இலங்கை சிறையில் வாடும் 56 தமிழக மீனவர்களை விடுவிக்கவும், 75 மீன்பிடிப் படகுகளை மீட்க வலியுறுத்தியும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது, 

இலங்கைச் சிறைகளிலிருந்து தமிழகத்தை சேர்ந்த 12 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை மேற்கொண்டமைக்காக ஒன்றிய அரசுக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டதுடன், கடந்த 2021 டிசம்பர் 19 மற்றும் 20-ம் நாளிலிருந்து இலங்கை சிறைகளில் வாடிக் கொண்டிருக்கும் 56 மீனவர்களை விடுவித்து, பாதுகாப்பாக இந்தியாவுக்கு அழைத்து வர தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டுள்ளார். 

மேலும், இலங்கை அரசின் காவலில் வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களுக்குச் சொந்தமான, அவர்களின் வாழ்வாதாரத்திற்கு  இன்றியமையாத 75 மீன்பிடிப் படகுகளையும் மீட்டெடுக்கவும் முதல்வர் கோரியுள்ளார்.  

வரவிருக்கிற பொங்கல் திருநாளை முன்னிட்டு, இலங்கை சிறைகளில் வாடும் 56 மீனவர்களை விடுவித்து, அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் மீண்டும் இணைவதை உறுதி செய்திடத் தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டுமென்றும், அதற்குரிய உயர்நிலைப் பேச்சுவார்த்தைகளை இலங்கை அரசாங்கத்துடன் நடத்திடக் கேட்டுக்கொள்வதாகவும் தனது கடிதத்தில் முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து