எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை தலைமை செயலகத்தில் இருந்து தேனாம்பேட்டை செல்லும் வழியில் தீவுத்திடல் அருகே உள்ள அன்னை சத்யா நகர் ரேசன் கடையில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
பொங்கல் பண்டிகையை ஒட்டி 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 4-ம் தேதி தொடங்கி வைத்தார். மொத்தம் 2 கோடியே 11 லட்சத்து 48 ஆயிரத்து 60 குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. பொங்கல் தினத்துக்குள் அனைவருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்க அறிவுறுத்தப்பட்டு இருந்தது. ஜனவரி 31-ம் தேதி வரை இதை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதற்கிடையே ரேசனில் வழங்கப்படும் பொங்கல் தொகுப்பில் பொருட்கள் தரமற்றதாக இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார். இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவது குறித்து ரேசன் கடையில் ஆய்வு செய்தார்.
தலைமை செயலகத்தில் இருந்து தேனாம்பேட்டை செல்லும் வழியில் தீவுத்திடல் அருகே உள்ள அன்னை சத்யா நகர் ரேசன் கடையில் ஆய்வு மேற்கொண்டார். பொங்கல் பரிசு தொகுப்பை வாங்கி பொருட்கள் தரமற்ற முறையில் இருக்கிறதா? என்று பரிசோதித்தார். இந்த ஆய்வின் போது அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி ஆகியோர் உடன் இருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


