முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2024-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதாவுடன் கூட்டணியா ? சந்திரபாபு நாயுடு பதில்

ஞாயிற்றுக்கிழமை, 9 ஜனவரி 2022      அரசியல்
Image Unavailable

2024-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதாவுடன் கூட்டணியா? என்பது குறித்து தெலுங்கு தேச கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு பதிலளித்துள்ளார்.

ஆந்திராவில் 2019 லோக்சபா தேர்தலுடன் சேர்ந்து நடந்த சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக அப்போது ஆளுங்கட்சியாக இருந்த தெலுங்கு தேசம் பா.ஜ.க. மற்றும் ஜன சேனா கட்சியுடனான கூட்டணியை முறித்துக்கொண்டது. அந்த தேர்தலில் தெலுங்கு தேசம் படுதோல்வியடைந்தது. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. ஜெகன்மோகன் முதல்வரானார்.

இந்த நிலையில் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. மற்றும் ஜனசேனா கட்சியுடன் மீண்டும் கூட்டணி அமைக்க தெலுங்குதேசம் முயற்சி செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தெலுங்கு தேசத்தின் கடந்த கால செயல்பாடுகளால் அந்தக் கட்சியுடன் கூட்டணி வேண்டாம் என்று பா.ஜ.க. தலைவர்கள் கருதுகின்றனர்.

ஆனால் சந்திரபாபு நாயுடுவுக்கு நெருக்கமான பா.ஜ.க. எம்.பி.க்கள் ஒய்.எஸ் சவுத்ரி சி.எம்.ரமேஷ் ஆகியோர் கூட்டணியை புதுப்பிக்க பா.ஜ.க. மேலிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் சந்திரபாபு நாயுடு அவரது சொந்த தொகுதியில் மருத்துவமனையில் என்.டிஆர் டிரஸ்ட் சார்பில் ஆக்சிஜன் பிளான்டை தொடங்கி வைத்தார் .

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது., என்னை பொருத்தவரை கூட்டணியை தேர்தல் வெற்றி மட்டுமே முடிவு செய்வதில்லை. ஆந்திர மக்களின் நலனின் அடிப்படையில் கூட்டணி முடிவு செய்யப்படுகிறது. இப்போதுள்ள அழிவு ஆட்சியிலிருந்து ஆந்திராவை காப்பாற்ற ஒரு பெரிய கூட்டணி தேவையாக இருக்கிறது. பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் உடனான கூட்டணி குறித்த தகவல் எதுவும் உண்மை அல்ல. கூட்டணி என்பது ஒருதலை காதலாக இருக்க முடியாது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து