Idhayam Matrimony

சிறுமி பலாத்காரம் செய்து கொலை: குற்றவாளிக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்தது ஐகோர்ட் மதுரை கிளை

புதன்கிழமை, 12 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

புதுக்கோட்டை, அறந்தாங்கி அருகே 7 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றவாளிக்கு மதுரை ஐகோர்ட் தூக்கு தண்டனையை உறுதி செய்தது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஏம்பல் என்ற கிராமத்தில் வசித்து வந்த 7 வயது சிறுமியை பூக்கடைக்காரர் பலாத்காரம் செய்து பின்னர் சிறுமியின் கழுத்தை அறுத்து கொன்று கண்மாயில் உள்ள புதரில் வீசய கொடூர சம்பவம் கடந்த ஜூலை மாதம் நடந்தது. போலீசார் தீவிர விசாரண நடத்தி அவரை கைது செய்தனர். 

இதையடுத்து 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்நிலையில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு இரட்டை மரண தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. 

இதைத் தொடர்ந்து அவருக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதை உறுதி செய்ய மதுரை ஐகோர்ட்டில் போலீஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், நீதிபதி ஜெயச்சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு, குற்றவாளிக்கு தூக்கு தண்டனை உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து