எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில்,தமிழக முஸ்லிம் கல்வி நிறுவனங்கள் மற்றும் சங்கங்கள் சார்பில்மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் ‘‘10-ம் வகுப்பு பொதுத்தேர்வில், மொழித்தேர்வில் தமிழ் மட்டுமல்லாது, மொழி சிறுபான்மை மாணவர்கள், தங்களது தாய்மொழி பாடத்தையும் சேர்க்கக் கோரிய வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இது அரசின் கொள்கை முடிவு என்பதால், இதுதொடர்பாக தமிழக அரசு 2 மாதங்களில் ஆய்வு செய்து உரியமுடிவை எடுக்க வேண்டும் என 2017-ம் ஆண்டு உத்தரவிட்டது.
பிற மாநிலங்களில் உருதுமொழிப் பாடமாக சேர்க்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் இவ்வாறு செய்யாவிட்டால் சிறுபான்மையினரின் மொழி கொஞ்சம், கொஞ்சமாக அழிந்துவிடும். எனவே 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் மொழி பாடத்துடன், சிறுபான்மை மொழிகளையும் கட்டாயமாக்கும் வகையில் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’’ என கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில், சிறுபான்மை மொழி பாடத்தில் தேர்வு எழுத இந்தாண்டு (2022) மார்ச் வரை அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து நீதிபதிகள், ‘‘2017-ம் ஆண்டு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை என்றால், அதுதொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்குதான் தொடர வேண்டுமே தவிர, அதையே காரணமாகக் கூறி அடுத்தடுத்து வழக்குகள் தொடர முடியாது. எனவே இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல’’ எனக் கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


