Idhayam Matrimony

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள்: இந்திய அணியில் ஜெயந்த், நவ்தீப் சைனி இணைந்தனர்

வியாழக்கிழமை, 13 ஜனவரி 2022      விளையாட்டு
Image Unavailable

Source: provided

ஜோகனர்ஸ் பர்க்: வாஷிங்டன் சுந்தர் விலகல் காரணமாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் புதிதாக 2 வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

வரும் 19-ம் தேதி... 

தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. தற்போது இரு அணிகளுக்கும் இடையேயான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், தென் ஆப்பிரிக்கா - இந்தியா இடையேயான முதல் ஒருநாள் போட்டி வரும் 19-ம் தேதி நடைபெற உள்ளது.

2 புதிய வீரர்கள்...

இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் இந்திய அணியில் புதிதாக 2 வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். ஜெயந்த் யாதவ் மற்றும் நவ்தீப் சைனி ஆகிய இரு வீரர்களும் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பால் வாஷிங்டன் சுந்தர் விலகியுள்ளார் அவருக்கு பதிலாக இந்திய அணியில் ஜெயந்த், நவ்தீப் சைனி சேர்க்கப்பட்டுள்ளனர்.

உத்தேச பட்டியல்:

கேஎல் ராகுல் (கேப்டன்), பும்ரா, தவான், கெய்குவாட், கோலி, சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஷ் அய்யர், வெங்கடேஷ் அய்யர், ரிஷப் பண்ட், இஷான் கிஷன், சஹால், ரவிசந்திரன் அஸ்வின், புவனேஷ்வர் குமார், தீபக் சஹார், பிரஷித் கிருஷ்ணா, ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, ஜெயந்த் யாதவ், நவ்தீப் சைனி. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 19 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 19 hours ago
View all comments

வாசகர் கருத்து